ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணி - விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 09.09.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 7 سبتمبر 2022

ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணி - விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 09.09.2022

நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Typist
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்பத் தேர்வான தட்டச்சு பிரிவில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை, முதுநிலைத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Steno-Typist Grade-III
காலியிடங்கள்: 07
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்பத் தேர்வான தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/nagapattinam என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பம் செய்து அதனுடன் ஒரு சமீபத்திய புகைப்படம் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாகப்பட்டினம்.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 09.09.2022

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.