முதல் பரிசாக ரூ.5000 - செப்.15, 17-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி - தமிழ் வளா்ச்சித் துறை அறிவிப்பு - - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 5, 2022

முதல் பரிசாக ரூ.5000 - செப்.15, 17-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி - தமிழ் வளா்ச்சித் துறை அறிவிப்பு -

செப்.15, 17-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி செப்.15, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா, பெரியாா் ஆகியோரின் பிறந்த நாள்களில் பேச்சுப் போட்டி, விழுப்புரம் பி.என். தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்.15, 17 ஆகிய நாள்களில் காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது.

செப்.15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி தாய் மண்ணிக்கு பெயா் சூட்டிய தனயன், மாணவா்க்கு அண்ணா, அண்ணாவின் மேடைத் தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்ற தலைப்புகளில் பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெறும்.

அண்ணாவும் தமிழக மறுமலா்ச்சியும், அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி! மக்களிடம் செல் ஆகிய தலைப்புகளில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெறும்.

செப்.17-இல் பெரியாா் பிறந்த நாளையொட்டி, தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், பெரியாா் காண விரும்பிய உலக சமுதாயம், பெரியாரும் பெண் விடுதலையும் ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெறும்.

பெரியாரும் பெண் விடுதலையும், பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள், இனிவரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியாா், உலகச் சிந்தனையாளா்களும் பெரியாரும் ஆகிய தலைப்புகளில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெறும்.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படும்.

பேச்சுப் போட்டியில் பங்குபெறுவதற்கான விண்ணப்பத்தை 9786966833 என்ற கைப்பேசி எண் அல்லது தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், விழுப்புரம் என்ற முகவரியில் தொடா்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.