கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 22, 2022

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆக். 3-ம் தேதி வரை காலக்கெடு நீடிப்பு.


கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஆக். 3-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ படிப்பு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் ஆக். 3-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

கால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பில் 580 இடங்களும், தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 100 இடங்களும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் போக எஞ்சிய இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். கடந்த ஆண்டை போலவே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கு (BVSc & AH / BTech) 2022-23ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழக இணையதளம் (https://adm.tanuvas.ac.in) மூலம் கடந்த 12.09.2022 காலை 10.00 மணி முதல் 26.09.2022 மாலை 5.00 மணி வரை வரவேற்கப்பட்டன.

கால்நடை மருத்துவ (BVSc & AH) பட்டப்படிப்பு மற்றும் BTech பட்டப்படிப்புகளுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி 03.10.2022 ஆம் தேதி மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினருக்கான (Foreign National) இடங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் (https://adm.tanuvas.ac.in) 14.10.2022 ஆம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை (https://adm.tanuvas.ac.in) காணவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.