ஊரக வளர்ச்சி துறையில் வேலை... MS Office தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 8 أغسطس 2022

ஊரக வளர்ச்சி துறையில் வேலை... MS Office தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

TN Job Vacancy : சிவகங்கை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் வட்டார அளவிலான வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்படி விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களை www.sivaganga.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் மற்றும் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, சிவகங்கை முகவரியிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் 10.08.2022 தேதி மாலை 5.45 மணிக்குள் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, சிவகங்கை முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் - மொத்த காலியிடம் 21 விவரம்

வட்டாரஒருங்கிணைப்பாளர்கள் - நியமனத்திற்கானதகுதிகள் :

1) பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேலும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் மற்றும் கணினி படிப்பில் 6 மாத பட்டையப்படிப்பு (MS Office) தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். கணினி அறிவியல் பட்டப்படிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2) அதிக பட்ச வயது 28க்குள் இருக்க வேண்டும். சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

நிபந்தனைகள் :

1. நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

2. மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் நடைபெற உள்ள எழுத்து தேர்வு விபரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

3. தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் அரசு இனச்சுழற்சி விதிமுறைகளின் படி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகங்கை மாவட்டம் பணியமர்த்தபடுபவர்.

அறிவிப்பு விவரம் மற்றும் விண்ணப்ப படிவம் பெற

https://sivaganga.nic.in

https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2022/07/2022072599.pdf

https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2022/07/2022072534.pdf

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.