ஆன்லைனில் தேசியக் கொடி வாங்க நாளை நள்ளிரவு வரை முன்பதிவு - அஞ்சல் துறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 10 أغسطس 2022

ஆன்லைனில் தேசியக் கொடி வாங்க நாளை நள்ளிரவு வரை முன்பதிவு - அஞ்சல் துறை அறிவிப்பு

ஆன்லைன் மூலம் தேசியக் கொடியை வாங்க விரும்புபவர்கள் நாளை நள்ளிரவுக்குள் முன்பதிவு செய்யுமாறு அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இந்தியத் திருநாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைவரும் தங்களது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றிகொண்டாடுவதற்காக ‘இல்லந்தோறும் மூவர்ணம்’ என்ற பிரச்சாரத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பாக வரும் 13, 14,15-ம் தேதிகளில் தேசியக் கொடியை ஏற்றிக் கொள்ளலாம்.

இந்நிலையில், அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை இம்மாதம் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. சென்னை நகர மண்டலத்தில் உள்ள 20 தலைமை தபால்நிலையங்கள், 545 துணை தபால் நிலையங்கள் மற்றும் 1,626 கிளை தபால் நிலையங்கள் என 2,191 தபால் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனைக்கு உள்ளது.ஒரு கொடியின் விலை ரூ.25.

மேலும், www.indiapost.gov என்ற இணையதளத்தில் உள்ள இ-போர்டல் மூலம் முன்பதிவு செய்தும் தேசியக் கொடியை வாங்கலாம். ஒருவருக்கு அதிகபட்சமாக 5 கொடிகள் மட்டுமே வழங்கப்படும். தேசியக் கொடி விற்பனை வரும் 13-ம் தேதி வரை நடைபெறும்.

ஆன்லைன் மூலம் தேசியக் கொடியை வாங்க விரும்புபவர்கள் நாளை (12-ம் தேதி) நள்ளிரவுக்கு முன்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.