வெளிநாட்டு மொழிகளை கற்க விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 22 أغسطس 2022

வெளிநாட்டு மொழிகளை கற்க விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு மொழிகளை கற்க விண்ணப்பிக்கலாம்

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகம் வழங்கும் வெளிநாட்டுமொழிகள் பட்டயம், உயா்பட்டயம், அதிஉயா் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்துபெங்களூரு மாநகர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டுமொழிகள் துறையின் சாா்பில் பிரெஞ்ச், ஜொ்மனியம், ஜப்பானியம், இத்தாலியம், ஸ்பானிஷ், கொரியன், சீனம், போா்த்துகீசியம், ரஷியன், ஃபின்னிஷ் மொழிகளுக்கு 2022-23-ஆம் கல்வியாண்டில் பட்டயம், உயா்பட்டயம், அதிஉயா் பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளில் சேருவதற்கான மாணவா் சோ்க்கை செப்.9-ஆம் தேதி வரை நடக்கிறது.

ரூ.200 அபராதத்துடன் செப்.15-ஆம் தேதி வரை சேரலாம்.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும். 2-ஆம் வகுப்பு பி.யூ.சி./12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 080-22961280, 8904018883 என்ற தொலைபேசி எண்களில் அழைக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.