"செயலியில் தான் வருகை பதிவு செய்யணும்னு உத்தரவு போட்டுட்டு இவரு பதிவேட்டில் வருகை பதிவு செய்றாரு...!" - ‘ஊருக்கு மட்டுமே உபதேசம்!’ - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 29 أغسطس 2022

"செயலியில் தான் வருகை பதிவு செய்யணும்னு உத்தரவு போட்டுட்டு இவரு பதிவேட்டில் வருகை பதிவு செய்றாரு...!" - ‘ஊருக்கு மட்டுமே உபதேசம்!’

"செயலியில் தான் வருகை பதிவு செய்யணும்னு உத்தரவு போட்டுட்டு இவரு பதிவேட்டில் வருகை பதிவு செய்றாரு...!"

‘ஊருக்கு மட்டுமே உபதேசம்!’

பள்ளிக்கல்வி துறையின், 'எமிஸ்' டிஜிட்டல் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள மாணவர்களின் விபரங்கள் அடிப்படையில், அரசு பள்ளிகளின் வருகை பதிவுக்கு, தனியாக மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. அனைத்து பள்ளி களிலும், இந்த செயலி வாயிலாக வருகைப்பதிவு செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், சென்னை நங்கநல்லுாரில் உள்ள நேரு அரசு மேல் நிலைப் பள்ளிக்கு சென்றார். அப்போது, ஒரு வகுப்பறைக்குள் சென்ற அமைச்சர், வருகை பதி வேட்டை கொண்டு வரச்சொல்லி, ஒவ்வொரு மாணவரின் பெயரையும் கூறி, வருகைப்பதிவு செய்தார்.

இதைப் பார்த்த ஆசிரியர் ஒருவர், 'இன்டர்நெட் பிரச்னை இருந்தாலும், செயலியில் தான் வருகை பதிவு செய்யணும்னு நமக்கு மட்டும் உத்தரவு போட்டுட்டு, இவரு பதிவேட்டில் வருகை பதிவு செய்றாரு...' என, முணுமுணுக்க, மற்றொரு ஆசிரியர், 'இவங்க உபதேச மெல்லாம் ஊருக்கு மட்டும் தான்...' என, 'கமென்ட்' அடித்து அங்கிருந்து நகர்ந்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.