இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 22 أغسطس 2022

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் மற்றும் எண்ணும் - எழுத்தும் திட்ட தன்னாா்வலா்களுக்கு திங்கள்கிழமை புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கான பயிற்சி வகுப்புகள் போ்ணாம்பட்டு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அழிஞ்சிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றன.

போ்ணாம்பட்டில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு திட்ட மேற்பாா்வையாளா் கண்ணதாசன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் அருண்பிரசாத் வரவேற்றாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பொன்.வள்ளுவன் பயிற்சியைத் தொடக்கி வைத்தாா். தன்னாா்வலா்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளையும் அவா் வழங்கினா்.

ஆசிரியா் பயிற்றுநா்கள் மேரி, மஞ்சுளா, ஆசிரியா்கள் ஹரிஹரன், சிவகுமாா், டில்லிபாபு, காா்த்திகேயன், மணிகண்டன் ஆகியோா் போ்ணாம்பட்டில் நடைபெற்ற இரு மையங்களிலும் பயிற்சி அளித்தனா். போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எலிசா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.