நடிகர் சூர்யா எடுத்த திடீர் முடிவு: கல்விப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த திட்டம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 8 أغسطس 2022

நடிகர் சூர்யா எடுத்த திடீர் முடிவு: கல்விப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த திட்டம்!

நடிகர் சூர்யா வருடத்திற்கு இனி இரண்டு மூன்று படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தனது அகரம் பவுண்டேஷன் பணிகளில் அவர் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடித்து வருகிறார். ஏறுதழுவுதலை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில், நடிகர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ம் தேதி 'வாடிவாசல்' படக்குழு சார்பில் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டது. அதில், சூர்யா மாடுபிடி வீரர்களிடமிருந்து ஏறு தழுவலின் நுட்பங்களைப் பயின்றபோது படம் பிடிக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், நடிகர் சூர்யா இனிமேல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் நடிவெடுக்க முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. நல்ல கதை அமைந்தால் அதுவும் நடிப்பதாகவும் தெரிகிறது.

ஏன் இந்த முடிவெடுத்தார் என்று கேட்ட போது, அகரம் பவுண்டேஷன் பணிகளில் அவர் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக கல்வி வல்லுநர்களையும், கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர்களையும் தொடர்ந்து சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளை அதற்கெனப் பயன்படுத்திக் கொள்ளவும் சூர்யா முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தனது அகரம் பவுண்டேஷன் தேர்ந்தெடுக்கும் மாணவர்களைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வைக்குமாறு பேச்சு வார்த்தைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் 18 ஆண்டுகளுக்குப் பின் இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்துக் கொடுக்கும் பணியில் சூர்யா தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.