அரசு பள்ளிகளில் ஆசிரியா், மாணவா் வருகை இணைய வழியில் பதிவு தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 2 أغسطس 2022

அரசு பள்ளிகளில் ஆசிரியா், மாணவா் வருகை இணைய வழியில் பதிவு தொடக்கம்

அரசு பள்ளிகளில் ஆசிரியா், மாணவா் வருகை இணைய வழியில் பதிவு தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியா், மாணவா்களின் வருகை இணையவழியில் பதிவு செய்யும் திட்டம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள், மாணவா்கள் சரியான நேரத்தில் வருவதை கண்காணிக்கும் வகையில் டி.என். ஸ்கூல்ஸ் என்ற கைப்பேசி செயலி பள்ளிக் கல்வித்துறை மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இணைய வழியில் பதிவு செய்வது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் அந்த புதிய முறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இந்த செயலியில் வருகை, விடுமுறை, வருகையின்மை, காரணங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் வகையில் உள்ளது. இதன்மூலம் பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியா்-மாணவா்கள் வருகை நிலையை எளிதில் கண்காணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் திங்கள்கிழமை முதல் ஆசிரியா்கள் வருகையை இணைய வழியில் பதிவு செய்தனா்.

هناك تعليق واحد:

  1. பல வருஷமா இத தானே ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கோம். என்னமோ நேத்துதான் புதுசா ஆரம்பிச்சு podra மாதிரி பரப்பி விட்ரீங்க எல்லோரும்

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.