பள்ளிக்கல்வித்துறையின் எச்சரிக்கை அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 17 أغسطس 2022

பள்ளிக்கல்வித்துறையின் எச்சரிக்கை அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளிகள் நடக்கும் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கு அந்தந்த பள்ளி நிர்வாகங்களே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் இறப்பு விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உஷாரான சில தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்களின் பெற்றோரை அழைத்து அவர்களது பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அவர்களே பொறுப்பு என்ற ரீதியில் கடிதங்களை பெற்றதாக செய்திகள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள் ளது.

இந்நிலையில், கல்வித் துறை சார்பில்,அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்ற றிக்கை ஒன்றை முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளது. அதில், பள்ளி நேரத்தில், பள்ளி வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர் வாகமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் விஷயத்தில் தனியார் பள்ளிகள் தவறாக நடந்து கொண்ட விதம், விசார ணையில் உறுதியாகும்பட் சத்தில், சட்டப்பூர்வ நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும், பெற்றோர் தயங் காமல் புகார் அளிக்கலாம் என்றும் அந்த சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.