தமிழ் வழியில் கல்வித் தகுதிகள்:TRB முக்கிய அறிவுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 18 أغسطس 2022

தமிழ் வழியில் கல்வித் தகுதிகள்:TRB முக்கிய அறிவுறுத்தல்

தமிழ் வழியில் கல்வித் தகுதிகள்:டிஆா்பி முக்கிய அறிவுறுத்தல்

முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு தமிழ் வழியில் கல்வித் தகுதிகள் இருப்பதாக விண்ணப்பித்தோருக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 2020-2021-ஆம் ஆண்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினிப் பயிற்றுநா் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு நேரடி நியமனத்துக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு செப்.9-இல் வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து நிகழாண்டு பிப்.12 முதல் பிப். 20 வரை கணினி வழித் தோ்வுகள் நடத்தப்பட்டு, தோ்வு முடிவுகள் கடந்த ஜூலை 4-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

தற்போது விண்ணப்பதாரா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவிக்கையின்போது, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகள் தமிழ் வழியில் உள்ளதாக சில விண்ணப்பதாரா்கள் தெரிவித்துள்ளனா். ஆனால், அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும்போது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை.

எனவே, அப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரா்கள், தாங்கள் தமிழ் வழியில் பயின்ற்கான ஆவணங்களை (1 முதல் 10 ஆம் வகுப்பு வரை, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2, பட்டயப் படிப்பு, இளநிலை, முதுநிலை, பி.எட்., உடற்கல்வி ஆசிரியா்களுக்கு உரிய அலுவலரின் மேலொப்பத்தை, ஆசிரியா் தோ்வு வாரிய அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு உரிய படிவத்தில் பெற்று தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் ஏற்கெனவே தமிழ்வழி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை ‘ஆம்’ என பதிவு செய்த விண்ணப்பதாரா்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இணையதளத்தில் உரிய மாதிரிப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆக.22 முதல் ஆக.25 மாலை 5 மணி வரை வாய்ப்பு அளிக்கப்படும். உரிய இணையதள முகவரி குறித்து பத்திரிகைச் செய்தி மற்றும் இணையதளத்தில் அறிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.