LKG & UKG வகுப்புகளுக்கு மீண்டும் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஆணையை ரத்து செய்ய கோருதல் சார்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 8 يوليو 2022

LKG & UKG வகுப்புகளுக்கு மீண்டும் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஆணையை ரத்து செய்ய கோருதல் சார்பு.

LKG & UKG வகுப்புகளுக்கு மீண்டும் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஆணையை ரத்து செய்ய கோருதல் சார்பு.

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்தில் பணியாற்றி வந்த திருமதி. சூ.கலையரசி, திருமதி. மு.அருள்செல்வி, திருமதி.ஆரீட்டா ஆகிய மூன்று ஆசிரியைகளுக்கும் கடந்த 2019 ஆண்டு முதல் 2022 வரை ஏற்கனவே விழுப்புரம் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் L.KG & UKG வகுப்புகளுக்கு மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டனர். தற்பொழுது விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் 29.06.2022 அன்று மேற்கண்ட மூன்று ஆசிரியைகளுக்கு மீண்டும் விழுப்புரம் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் LKG & UKG வகுப்புகளுக்கு மாற்றுப்பணிக்கு செல்ல ஆணை வழங்கியுள்ளார். இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, LKG & UKG வகுப்புகளுக்கு மீண்டும் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்ட மேற்காண் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஆணையை ரத்து செய்து ஆசிரியர் நலன் காத்து உதவிட பெரிதும் வேண்டுகிறேன்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.