தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம், சென்னை கிறித்துவக் கல்லூரி சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி முகாம் நடைபெற்றது. கிறிஸ்துவ கல்லூரியில் 2 நாட்களாக நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், 6 முதல் 8ம் வகுப்பு அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் சுமார் 50 பேர் கலந்துக்கொண்டனர்.
பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கரோலின் விக்டோரியா வரவேற்றார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலாளர் பால் வில்சன் கற்பித்தலில் புதிய உத்திகளை கையாள வேண்டியத்தின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, ஒவ்வொரு வகுப்பை தொடங்கும் முன் மாணவர்களுக்கு வழங்கப்படும் பொதுவான ஆலோசனைகள் மூலம் கற்றலுக்கான உகந்த சூழலை உருவாக்க முடியும் என்பதை மையப்படுத்தி பேசினார்.
புனித தோமையார் மலை, மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன் இந்த பயிற்சியில் பெறக்கூடிய ஆற்றல் வளங்களை ஒவ்வொரு பயிற்சியாளரும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என கேட்டுக்கொண்டார். முதற்கட்டமாக இயற்பியல் மற்றும் வேதியியல் பொருள் சார்ந்தும், இரண்டாம் கட்டமாக உயிரியல் பொருள் சார்ந்தும் பயிற்சி நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தின், கல்வி வளர்ச்சி நிலையத்தை சார்ந்த வாசுதேவன், விஞ்ஞான அலுவலர் மலர்கொடி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில், முனைவர் ஜாய்ஸ் ஷீபா நன்றி கூறினார்.
السبت، 30 يوليو 2022
New
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி முகாம்: பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்பு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.