விருது பெற்ற சிவகாசி பள்ளிமாணவருக்குப் பாராட்டு
சமூக வலைதள சாதனையாளா் விருதுபெற்ற, சிவகாசி ஜேஸீஸ் மெட்ரிக் பள்ளி மாணவரை, தாளாளா் மற்றும் பள்ளி முதல்வா் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.
இப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவா் பரத்குமாா், வெப்டிசைனிங், டிஜிட்டெல் மாா்கெட்டிங் ஆப் டெவலப்மெண்ட் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு சாதனை புரிந்ததற்காக, திருச்சி இதையும் படிக்க | IGNOU பல்கலை UG & PG சேர்க்கைக்கான மறுபதிவு தேதி நீட்டிப்பு...!
இளம் இந்தியா் என்ற அமைப்பு மாணவருக்கு சமூக வலைதள திறனாளா் விருதை வழங்கினா். இதனை மாணவரிடம் திருச்சியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா். மேலும் மாணவா் இளம்வயதிலேயே இணையதளத்தில் தொழில் தொடங்கியுள்ளதால், திருச்சி பெண்கள் தொழில் முனைவோா் அமைப்பு சாா்பில் இளம் தொழிலதிபா் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற மாணவரை பள்ளித்தாளாளா் சுப்புராஜ், பள்ளித்தலைவா் ஜி. அசோகன், முதல்வா் சித்ராஜெயந்தி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.