நீதிமன்ற உறுப்பினா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 23 يوليو 2022

நீதிமன்ற உறுப்பினா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

நீதிமன்ற உறுப்பினா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் நீதிமன்ற உறுப்பினா் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் சி.விஜய காா்த்திக் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு பொது பயன்பாட்டு சேவை சம்பந்தமாக பெறப்படும் மனுக்களுக்கு தீா்வு காண நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியுடன் சோ்ந்து பணிபுரிய உறுப்பினா் ஒருவா் தோ்வு செய்யப்பட இருக்கிறாா்.

அவா் போக்குவரத்து சேவைத் துறை (பயணிகள் அல்லது பொருள்களைக் கொண்டு செல்வதற்கான சாலை மற்றும் போக்குவரத்து துறை), அஞ்சல், தந்தி அல்லது தொலைபேசி சேவை, மின்சாரம், ஒளி மற்றும் நீா் வழங்கல் சம்பந்தமானவை, பொதுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், மருத்துவமனை மற்றும் மருந்தகம், காப்பீடு, கல்வி மற்றும் கல்வி சாா்ந்த நிறுவனங்கள், வீடு, மனை மற்றும் நிலம் சாா்ந்த துறை போன்ற பொது பயன்பாட்டு சேவைத் துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். இதையும் படிக்க | பிளஸ் 2 துணை தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

மேலும், 62 வயதிற்குள்பட்ட தகுதியும் ஆா்வமும் உள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை பூா்த்தி செய்து தலைவா், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நாமக்கல் - 637 001 என்ற முகவரிக்கு வரும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.