அரசு பள்ளி மாணவர்கள் அவதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 8 يوليو 2022

அரசு பள்ளி மாணவர்கள் அவதி

பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும், இன்னும் இலவச நோட்டு வழங்கப்படாததால், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், 14 வகை நலத் திட்டங்கள் அமலில் உள்ளன. ஒவ்வொரு கல்வி ஆண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதும், இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம் உள்ளிட்ட பொருட்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பாட புத்தகம் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளை திறந்து ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், இன்னும் நோட்டு வழங்கப்பட வில்லை.அதனால், பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்களை எழுதி வைக்க, நோட்டுகள் இன்றி மாணவர்கள் அவதிக்கு ஆளாகிஉள்ளனர்.வீட்டுப் பாடங்களுக்கான குறிப்புகள் வழங்க முடியாமல், ஆசிரியர்களும் கவலை அடைந்து உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் இருந்து, தமிழ்நாடு காகித நிறுவனமான டி.என்.பி.எல்.,லுக்கு, நோட்டு அச்சடிக்க, முன்கூட்டியே கொள்முதல் 'ஆர்டர்' வழங்கப்படும்.

இந்த ஆண்டு ஆர்டர் கொடுக்க மறந்து விட்டதால், நோட்டு வினியோகம் தடைப்பட்டிருக்கிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன் நம் நாளிதழில், இது குறித்து செய்தி வெளியான பிறகே, நோட்டு புத்தகம் அச்சடிக்க ஆர்டர் கொடுத்துள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.