ATMல் பணம் எடுக்கும்போது OTP அவசியம்: SBI - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 25 يوليو 2022

ATMல் பணம் எடுக்கும்போது OTP அவசியம்: SBI

பணம் எடுக்கும்போது ஒன் டைம் பாஸ்வேர்ட் எனப்படும் ஓடிபி எண்ணை பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளது எஸ்பிஐ. சைபர் குற்றங்களைத் தடுக்க இந்த நடைமுறையை நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கொண்டு வந்துள்ளது.

அதன்படி ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுக்கும்போது ஓடிபி பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஒன் டைம் பாஸ்வேர்ட் ஒரே ஒரு பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியாது. அடுத்ததாக மீண்டும் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுக்க வேண்டும் என்றால் அதே போல் ஓடிபியை பதிவு செய்த மொபைலில் பெற்று திரையில் பதிவிட்டே பணம் எடுக்க இயலும். இந்த நடைமுறையை விரைவில் பல்வேறு வங்கிகளும் பின்பற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | SMC - சிக்கனத் தந்தி - கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகம்

இதன் மூலம் மர்ம நபர்கள், ஏமாற்று பேர்வழிகள் வங்கிக் கணக்குகளில் இருந்து பண மோசடி செய்வது தடுக்கப்படும் என்று எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஓடிபி பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி?

* ஓடிபி பயன்படுத்தி பணம் எடுக்க நீங்கள் உங்கள் டெபிட் கார்டையும், மொபைல் ஃபோனையும் பக்கத்திலேயே வைத்திருப்பது அவசியம்.

* நீங்கள் உங்கள் டெபிட் கார்டை ஏடிஎம் மெஷினில் செலுத்திவிட்டு ஏடிஎம் பின் நம்பரை பதிவிட வேண்டும். கூடவே வேண்டிய தொகையையும் குறிப்பிட வேண்டும். பின்னர் அந்தத் தொகை ரூ.10,000க்கும் மேல் இருந்தால் ஓடிபி எண் கேட்கப்படும்.

* வங்கியில் நீங்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும்.

* உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணை ஏடிஎம் இயந்திர திரையில் பதிவிடவும்

* உங்கள் பரிவர்த்தனை நிறைவு பெற்று பணம் கைக்கு வரும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.