உபரிப்பணியிடங்கள் இருப்பதால் பணி நீட்டிப்பு வழங்க இயலாது - விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 15 يوليو 2022

உபரிப்பணியிடங்கள் இருப்பதால் பணி நீட்டிப்பு வழங்க இயலாது - விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

உபரிப்பணியிடங்கள் இருப்பதால் பணி நீட்டிப்பு வழங்க இயலாது - விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

விருதுநகர் மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலரின் செயல்முறைகள்

மறுநியனம் - விருதுநகர் மாவட்டம், சிவகாசி கல்வி மாவட்டம் – நடையனேரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் (சமூக அறிவியல்) பணிபுரிந்து வரும் திருமதி.ரா.ஈடித்லதா என்பவர் வயது முதிர்வின் காரணமாக 31.07.2022 பிற்பகல் பணி ஓய்வு - 01.08.2022 முதல் 31.05.2023 முடிய மறுநியமனம் அடிப்படையில் பணிநீட்டிப்பு அனுமதி ஆணை கோரியது - நிராகரித்து ஆணையிடுதல் - சார்பு.

பார்வை:

1. அரசாணை (நிலை) எண்.115 (பள்ளிக்கல்வித் (பக5(2) துறை, நாள்.20.12.2018

2. அரசாணை (நிலை) எண்.115 (பள்ளிக்கல்வித் (பக5(2) துறை, நாள்.28.06.2022 3. நடையனேரி, அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியரின் கடித நாள். 11.07.2022

விருதுநகர் மாவட்டம், நடையனேரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் (சமூக அறிவியல்) பணிபுரிந்து வரும் திருமதி.ரா.ஈடித்லதா என்பார் வயது முதிர்வின் காரணமாக 31.07.2022 பிற்பகல் அன்று பணி ஓய்வில் செல்ல இருப்பதால், அந்த கல்வி ஆண்டின் இறுதி வரை, அதாவது 01.08.2022 முதல் 31.05.2023 வரை மறுநியமனம் அடிப்படையில் பணிநீட்டிப்பு செய்து ஆணை வழங்கிட வேண்டி, பார்வை 3ல் காணும் பள்ளித் தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் கருத்துரு பெறப்பட்டது.

பார்வை 1 மற்றும் 2ல் காணும் அரசாணைகளில் மறு நியமனம் கோரும் பாடங்களில், உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் இருக்கும் நிலையில், மறுநியமனம் செய்ய கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உபரி பணியிடங்களாக இருப்பதால், மேற்படி ஆசிரியருக்கு மறுநியமனம் அடிப்படையில் பணி நீட்டிப்பு ஆணை விதிகளின்படி வழங்க இயலாது பள்ளித் தலைமை ஆசிரியருக்கு என தெரிவிக்கலாகிறது.

هناك تعليقان (2):

  1. விருதுநகர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லையா?

    ردحذف
  2. உபரி பணியிடம் என்பது பள்ளியை பொறுத்தா ???மாவட்டத்தை பொறுத்தா???

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.