முதுநிலை தொல்லியல் படிப்பு; விண்ணப்பிக்க 29 கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 23, 2022

முதுநிலை தொல்லியல் படிப்பு; விண்ணப்பிக்க 29 கடைசி நாள்

தமிழக தொல்லியல் துறையால் நடத்தப்படும், இரண்டாண்டு முதுநிலை டிப்ளமா படிப்புக்கு விண்ணப்பிக்க, இம்மாதம் 29ம் தேதி கடைசி நாள்.தமிழக தொல்லியல் துறை சார்பில், இரண்டுஆண்டு கால தொல்லியல், கல்வெட்டியல், மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் ஆகிய துறைகளில் டிப்ளமா படிப்பு கற்பிக்கப்படுகிறது. இதற்கு, முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிக்க | Medical Services Recruitment Board - Results - Pharmacist (Unani) (Ayurveda) (Homoeopathy) (Siddha) - PDF

மாதம் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். தமிழ், ஆங்கிலத்தை பயிற்றுமொழியாக தேர்வு செய்யலாம். இதற்கான நுழைவுத் தேர்வு, அடுத்த மாதம் 8ம் தேதி நடைபெறும். நுழைவு தேர்வில், தமிழ் இலக்கியம், வரலாறு, தொல்லியல், சமீபத்திய அகழாய்வுகள், கல்வெட்டியல், நாணயவியல், வரலாற்று சின்னங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட துறைகளில் இருந்து, கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்படும்.

இதையும் படிக்க | பிளஸ் 2 துணை தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

இந்த தேர்வை, சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் எழுதலாம். விண்ணப்பங்களை, www.tnarch.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, வரும் 29ம் தேதிக்குள், 'ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை -8' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, tniam2224@gmail.com என்ற மின்னஞ்சலிலோ, 044 - 2819 0023 என்ற தொலைபேசி எண்ணிலோ தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.