11-ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் - தேர்வுத்துறை தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 22, 2022

11-ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் - தேர்வுத்துறை தகவல்

11-ம் துணைத் தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டை வரும் 26-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 11-ம் துணைத் தேர்வு ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது

மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு, ஆகஸ்ட் 2022

தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் தொடர்பான

செய்திக் குறிப்பு

நடைபெறவுள்ள ஆகஸ்ட் 2022, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுத, விண்ணப்பித்தத் தேர்வர்கள் தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 26.07.2022 நண்பகல் 12.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் "HALL TICKET" என்ற வாசகத்தினை 'Click' செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள “HSE FIRST YEAR SUPPLEMENTARY EXAM, AUGUST 2022 - HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை 'Click' செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தர பதிவெண் (Permanent Register No.) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களை தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆகஸ்ட் 2022, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.