சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - சென்னை மூன்றாமிடம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 22, 2022

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - சென்னை மூன்றாமிடம்

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது! சென்னை மூன்றாமிடம்

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வில் 92.71 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 91.25% மாணவர்களும் 94.54% மாணவிகளும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், 98.82% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பெற்றுள்ளது. 98.16% தேர்ச்சியுடன் பெங்களூரு மண்டலம் இரண்டாமிடத்தையும் 97.79% தேர்ச்சியுடன் சென்னை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

இதையும் படிக்க | TNPSC - GROUP- I SERVICES - COMBINED CIVIL SERVICES EXAMINATION- I - NOTIFICATION - 21/07/2022 - PDF

ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் 7% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் ​தேர்வு முடிவுகளை https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.