ஆகஸ்ட் 1ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 31 يوليو 2022

ஆகஸ்ட் 1ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஆகஸ்ட்1 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கோவில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

ஆடிப்பூரம் நாளில்தான் ஆண்டாள் அவதரித்தார் என்பது நம்பிக்கை. ஆண்டாள் அவதார தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றுபரவலை தடுக்கும் வகையில் திருவிழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டு ஆடிப்பூரம் விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியுள்ளது. மிகப்பிரமாண்டமாக நடைபெற இருக்கும் தேரோட்டத்தையொட்டி, விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், இவ் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி பணி நாளாக செயல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.