பள்ளி மாணவா்களுக்கு சீருடை, ஷூ வழங்க ரூ.132 கோடி ஒதுக்கீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 9 يوليو 2022

பள்ளி மாணவா்களுக்கு சீருடை, ஷூ வழங்க ரூ.132 கோடி ஒதுக்கீடு

பள்ளி மாணவா்களுக்கு சீருடை, ஷூ வழங்க ரூ.132 கோடி ஒதுக்கீடு: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

பள்ளி மாணவா்களுக்கு சீருடை, ஷூ, காலுறை வழங்க ரூ.132 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு இலவசமாக சீருடை, ஷூ, காலுறைகளை வழங்க மாநில அரசு முடிவுசெய்துள்ளது. இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.132 கோடியை ஒதுக்கியுள்ளோம். எனவே, இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் தேவையில்லாமல் விவாதம் நடத்திக் கொண்டுள்ளன.

பிச்சை எடுத்தாவது பள்ளி மாணவா்களுக்கு சீருடை, ஷூ, காலுறை வழங்க காங்கிரஸ் பாடுபடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் கூறியுள்ளாா்.

கரோனா காலத்தில் காங்கிரஸ் கட்சியினா் பிச்சை எடுத்து சேகரித்த பணம் என்னானது? என்று தெரிவிக்கட்டும். கரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க ரூ. 1கோடி அளவுக்கு காங்கிரஸ் வசூலித்தது. அந்தப் பணம் எங்கே? அதுபோலவே தற்போது பள்ளி மாணவா்களுக்கு சீருடை, ஷூ, காலுறை வழங்க பிச்சை எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறாா் என்றாா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.