காஞ்சிபுரம்: தனியார் பள்ளியில் ஆசிரியர் அடித்ததால் 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 18 يوليو 2022

காஞ்சிபுரம்: தனியார் பள்ளியில் ஆசிரியர் அடித்ததால் 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி

கள்ளக்குறிச்சியில் மாணவியின் மரணம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், காஞ்சிபுரத்தில் 11 ஆம் வகுப்பு மாணவன் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பதவி தற்காலிக தேர்வர்கள் பட்டியல் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்

காஞ்சிபுரம் அருகே ஆர்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இஷிகாந்த் (16). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள பாரதிதாசன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகின்றார்.இவர் தனது பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். மாலை 4 மணிக்கு பள்ளியில் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவனை 5-30 மணிக்கு அவர்களின் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். இதன் தொடர்ச்சியாக மாணவனின் பொற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனுக்கு கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மூக்கு பகுதியில் அதிக இரத்தம் வெளியேறியது. மாணவன் காயமடைந்த தகவலை தொடர்ந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் பள்ளி முதல்வர் மற்றும் பொற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர் மாணவனுக்கு ஸ்கேன் எடுக்க அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதையும் படிக்க | நீட் தேர்வில் 45 நிமிடங்களுக்கு பின் வினாத்தாள் மாற்றி வழங்கல்: மாணவர்கள் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி மர்மமான உயிரிழந்து பள்ளி சூறையாடிய சம்பவம் அடங்குவதற்க்குள் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் பாரதிதாசன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்கட்ட விசாரணையில் பள்ளி ஆசிரியர் மாணவனை அடித்ததால் மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவன் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.