ஓட்டப்பிடாரம் அருகே 10-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 25 يوليو 2022

ஓட்டப்பிடாரம் அருகே 10-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே 10ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு பரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு பேச்சிராஜ், கொம்பையா(15) என 2 மகன்கள் உள்ளனர். கொம்பையா, புதியம் புத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று கோபாலகிருஷ்ணன் வெளியூருக்கு வேலைக்கு சென்ற நிலையில், லட்சுமி தனது உறவினரை பார்க்க சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த கொம்பையா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் படிக்க | முதல்வரிடம் மாணவி கேட்ட அந்த ஒரு கேள்வி.. தேடிச்சென்று பதில் கூறிய முதல்வர் ஸ்டாலின்.!
சிறிது நேரத்திற்கு பின்னர் வீட்டிற்கு வந்த லட்சுமி, மகன் தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து தகலின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார், கொம்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.