பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாணவர்கள் இடைநின்ற காரணத்தை துல்லியாமாக கணக்கெடுக்க வேண்டும் எனவும், 100 சதவீதம் மாணவர்கள் வருகை புரிவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குநர் சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்,
"1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் 100 சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். கரோனா பெருந்தொற்றினால் இடைநின்ற பள்ளி மாணவர்களை கண்டறிவதற்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பினால் 5 லட்சத்து 33 ஆயிரத்து 447 மாணவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 8 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.3 லட்சத்து 26 ஆயிரத்து 779 மாணவர்கள் சேர்க்க தேவையில்லை என கண்டறியப்பட்டனர். 16 ஆயிரத்து 600 மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் என கண்டறியப்பட்டு, மாவட்ட ஆட்சியரிடம் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. 2022-23 ம் கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து உடனடியாக பள்ளிகளில் சேர்க்கும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்த வேண்டும்.கல்வியாண்டின் இறுதியில் கணக்கெடுப்பு நடத்தாமல், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். EMIS இணையதளம், செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளிக் கட்டணம் கட்டாதது, உடல்நல பிரச்சனை, சிறப்பு தேவை, குழந்தைத் திருமணம், இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இடைநின்ற மாணவர்களை கண்டறிவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 5,8 மற்றும் 10-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க தனிக் கவனம் செலுத்த வேண்டும். பள்ளிச்செல்லா குழந்தைகளை கணக்கெடுப்பதுடன் அவர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அக்டோபர் மாதம் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் தயார் செய்யும்போது, நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்", என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.