CBSE 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் தகவல்..! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 28 يونيو 2022

CBSE 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் தகவல்..!

CBSE 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலையில் வெளியீடு: ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் தகவல்..!!

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை மாதம் 4 மற்றும் 10ம் தேதிகளில் வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 12ம் வகுப்பு வாரிய தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் நிலவி வந்தது. பொதுத் தேர்வை 2 பிரிவுகளாக நடத்தி நிறுத்துவதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நாடு முழுவதும் சர்ச்சைகள் எழுந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 4ம் தேதி வெளியாகும் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஜூலை 10ம் தேதி வெளியாகும் என்று டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.