துறை தேர்வு உத்தேச விடை குறிப்பு வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 28 يونيو 2022

துறை தேர்வு உத்தேச விடை குறிப்பு வெளியீடு

துறை தேர்வு உத்தேச விடை குறிப்பு வெளியீடு

அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வின் உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு ஊழியர்களுக்கு, 151 துறை தேர்வுகள் இந்த மாதம், 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்டன. அதில், 122 தேர்வுகளின் உத்தேச விடை குறிப்புகள், www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றின் மீது ஆட்சேபனைகள் இருந்தால், உரிய ஆதாரங்களுடன், இன்று முதல் வரும் 5ம் தேதிக்குள், contacttnpsc@gmail.com என்ற இ- - மெயில் முகவரிக்கு மனுக்கள் அனுப்பலாம். கடிதம் வழியே ஆட்சேபனை தெரிவித்தால், ஏற்றுக் கொள்ளப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.