வாய்ப்பு உங்களுக்கானதா..? பள்ளிக்கல்வித்துறையில் 38, 114 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 15 يونيو 2022

வாய்ப்பு உங்களுக்கானதா..? பள்ளிக்கல்வித்துறையில் 38, 114 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பள்ளிக்கல்வித்துறையில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் இணைந்து செயலாற்ற இளநிலை, முதுநிலை என்ற இரண்டு பிரிவுகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 38, 114 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்வர்களிடம் இருந்து விண்ணப்பிக்காலம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் நிர்வாகம், மாணவர்களுக்கான புதிய திட்டங்கள், பல்வேறு செயல்பாடுகளுக்கு மாநிலம் முழுவதும் கல்வி அலுவலர்கள், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துறை சார்ந்த சர்வே, திட்டங்களை செயல்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு இளைஞர்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு கல்வி ஊக்கத்தொகை (TN Education Fellowship) திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, இளநிலை, முதுநிலை என்று இரண்டு பிரிவுகளில் தலா 38,114 பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் https://tnschools.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு செய்யப்படும் இளநிலை பணியிடங்களுக்கு மாதம் ரூ.32 ஆயிரம், முதுநிலை பணிகளுக்கு மாதம் ரூ. 45 ஆயிரம் மதிப்பூதியமாக வழங்கப்படும். மேற்கண்ட பணிகள் 2024 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிக அடிப்படையிலான பணி என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.