இன்று வெளியாகிறது குரூப் 2 தேர்வின் உத்தேச விடைகள்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 26 مايو 2022

இன்று வெளியாகிறது குரூப் 2 தேர்வின் உத்தேச விடைகள்!!

குரூப் 2 தேர்வின் உத்தேச விடைகள்!!

குரூப் 2, 2A எழுத்துத் தேர்விற்கான உத்தேச விடைகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப் 2, 2A பதவிகளுக்கான எழுத்துத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் நடத்தியது. 11 ,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் தேர்வை எழுதினர்.
(Answer Keys)

பொதுவாக, தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து 6 நாட்களுக்குள் தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியிடப்படும். அதன்படி, தேர்வாணைய இணையதளத்தில் குரூப் 2 தேர்விற்கான உத்தேச விடைகள் (Answer Keys)இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'Answer Key Challenge'

ஒருவேளை, வெளியிட்ட உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம். விடைகள் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள 'Answer Key Challenge' என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்யலாம். விடைத்தாள் மதிப்பீடு பணி

மேல்முறையீடு தொடர்பான கோரிக்கைகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும் என்றும் அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படாது என்று டிஎன்பிஎஸ்சி தெளிவுபடுத்தியுள்ளது.

பெறப்பட்ட வேண்டுகோள்கள் அனைத்தும் ஒவ்வொரு பாடத்திற்கான வல்லுநர்கள் கொண்ட குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். வல்லுநர் குழுவின் பரிந்துரையில் அடிப்படையில், இறுதியான விடைகள் முடிவுசெய்யப்பட்டு, அதன் பின்னர் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியானது தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.