முதுநிலை மருத்துவப் படிப்பு: சிறப்பு சுற்று கலந்தாய்வு ரத்து
புது தில்லி: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தோ்வின் வாயிலாக நடைபெற்ற ‘மாப்-அப்’ சிறப்பு சுற்று கலந்தாய்வை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையை சுகாதார சேவைகள் இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) நடத்தியது. இரு சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்த நிலையில், புதிதாக 146 இடங்கள் சோ்க்கப்பட்டு அதற்கான சிறப்பு சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதற்கு எதிராக சில மாணவா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த விவகாரத்தைக் கடந்த புதன்கிழமை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த், பெலா எம்.திரிவேதி ஆகியோரைக் கொண்ட அமா்வு, சிறப்பு சுற்று கலந்தாய்வை நடத்துவதில் தற்போதிருக்கும் நிலை தொடர வேண்டுமெனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வழக்கு தொடா்பான விசாரணை வியாழக்கிழமை மீண்டும் நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 146 இடங்களுக்கான சிறப்பு சுற்று கலந்தாய்வை ரத்து செய்வதாக அறிவித்தனா். முதல் இரு சுற்றுகள் நடைபெறும்போது அந்த இடங்கள் ஒதுக்கப்படாததால், மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு சுற்று கலந்தாய்வு ரத்து செய்யப்படுவதாக அவா்கள் அறிவித்தனா். முதுநிலைப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும், இரண்டாம் சுற்று கலந்தாய்வில் மாநில ஒதுக்கீட்டு இடங்களிலும் சோ்க்கப்பட்ட மாணவா்கள் 146 இடங்களுக்காக நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள நீதிபதிகள் அனுமதி அளித்தனா். இது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாணவா்களிடமிருந்து 24 மணி நேரத்துக்குள் டிஜிஹெச்எஸ் கருத்துகளைப் பெற வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், அவை குறித்து அதற்கடுத்த 72 மணி நேரத்துக்குள் முடிவெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினா். முன்னதாக, 146 இடங்களுக்கு மாணவா் சோ்க்கையை ரத்து செய்யவுள்ளதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், அதை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனா். அந்த இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்தினால், 146 கூடுதல் மருத்துவா்கள் நாட்டுக்குக் கிடைப்பாா்கள் என நீதிபதிகள் தெரிவித்தனா். அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவுக்குள்பட்டே உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனா்

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.