புதிய கற்றல் செயலி அறிமுகம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 22 أبريل 2022

புதிய கற்றல் செயலி அறிமுகம்

புதிய கற்றல் செயலி அறிமுகம்

ஸ்ரீசைதன்யா நிறுவனம் சார்பில், நீண்ட நேர கற்றலுக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், நாள் முழுதும், புதிய புதிய பாடங்களை, வீடியோ வடிவில் படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாதை சேர்ந்த ஸ்ரீசைதன்யா பயிற்சி நிறுவனம், நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான &'இன்பினிட்டி லேர்ன்&' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. பிளஸ் 2வுக்கு பின் நீட், ஜே.இ.இ., போன்றவற்றுக்கும், சி.பி.எஸ்.இ., தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்களுக்கு, எண்ணற்ற வீடியோ பாடங்கள், இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன. ஹைதராபாதில் நடந்த நிகழ்வில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சைதன்யாவின் புதிய கற்றல் செயலியை அறிமுகம் செய்தார். இந்த செயலியில் வீடியோ பாடங்கள் மட்டுமின்றி, நேரடி ஆன்லைன் உரையாடல் வகுப்பும் நடக்கும். அப்போது, மாணவர்கள் கைகளை உயர்த்தி, தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். தேர்வுக்கு படிப்பதற்கான ஆலோசனைகள், மனப்பாடம் செய்யும் எளிய வழிமுறை உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன.

ஸ்ரீசைதன்யா நிறுவன இயக்குனர் சுஷ்மா போபண்ணா கூறுகையில், &'&'இன்பினிட்டி லேர்ன் என்ற இந்த செயலியில் மாணவர்களின் கற்றலை அதிகப்படுத்த, 36 ஆண்டுகளுக்கும் மேலான வீடியோ பாடங்கள் இணைக்கப்பட்டு உள்ளன,&'&' என்றார்.

&'இன்பினிட்டி லேர்ன்&' செயலியின் சி.இ.ஓ., மற்றும் தலைவர் உஜ்வால் சிங் கூறுகையில், &'&'இந்த செயலி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, அவர்களின் கற்றல் முன்னேற்றத்தை அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. நாட்டில் சிறந்த ஆசிரியர்களை வைத்து பாடங்கள் தயாரித்து, செயலியில் இணைக்கப்பட்டுள்ளன,&'&' என்றார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.