சஸ்பெண்ட் CEO.,வுக்கு தலைமை அலுவலக பதவி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 21, 2022

சஸ்பெண்ட் CEO.,வுக்கு தலைமை அலுவலக பதவி

In the case of Question Paper 'League', a new post has been given to the 'Suspended' Education Officer. For Class X, Plus 1 and Plus 2 students, two phase diversion examinations were conducted.

In the first phase of the exam, in Plus 2, the question papers for subjects other than Tamil were leaked on the websites.

He was then suspended. A month ago, the suspension was dropped. He has been given the post of Secretary of the State Parent-Teacher Association at the head office premises of the school education department.

Gunasekara, who was the secretary of the Parent-Teacher Association, has been transferred as the Dharmapuri Principal Education Officer and Ganeshmurthy, who is working in Dharmapuri, has been transferred as the Thiruvannamalai Principal Education Officer.

Officers and teachers will not be relocated once the general examination arrangements begin. The current school education administration, in defiance of this tradition, has made this change. வினாத்தாள் 'லீக்' ஆன விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' ஆன கல்வி அதிகாரிக்கு, புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு, இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன.

முதல் கட்ட தேர்வில், பிளஸ் 2வில், தமிழ் தவிர, மற்ற பாடங்களுக்கான வினாத்தாள்கள், வலைதளங்களில் கசிந்தன.திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ., அருள்செல்வம், உரிய முறைகளை பின்பற்றாமல், வினாத்தாள்களை பள்ளிகளுக்கு அனுப்பியதால், இந்த தவறு நடந்ததாக கூறப்பட்டது.

பின் அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.ஒரு மாதம் கடந்த நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. அவருக்கு, பள்ளிக் கல்வி துறை தலைமை அலுவலக வளாகத்தில், மாநில பெற்றோர் - ஆசிரியர் கழக செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோர் - ஆசிரியர் கழக செயலராக பணியாற்றிய குணசேகரன், தர்மபுரி முதன்மை கல்வி அலுவலராகவும், தர்மபுரியில் பணியாற்றும் கணேஷ்மூர்த்தி, திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கமாக பொது தேர்வு ஏற்பாடுகள் துவங்கி விட்டால், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம் இருக்காது. தற்போதைய பள்ளிக் கல்வி நிர்வாகம், இந்த மரபை மீறி, இந்த மாற்றத்தை செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.