அரசுப் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 3, 2022

அரசுப் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

A traditional food festival was held at the Government School near Thirumayam and the students of the new school were welcomed in evening attire. More than 50 students are studying at the Kattupava Mosque Government Middle School near Thirumayam. Meanwhile, the school teachers decided to hold a traditional food festival at the school to create awareness among parents in the area about the importance of public schools.

Accordingly, the teachers cooked traditional foods, including pulses and steamed food, and highlighted the importance of traditional food among the students. Following this, the teachers gave sweets to the new students of the school and welcomed them by wearing evening dresses. All arrangements for the event were made by the school teachers. The event took the people of the area by surprise. மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

திருமயம் அருகே அரசுப் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்பட்டு புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே அப்பகுதி உள்ள பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா நடத்துவது என முடிவு செய்தனர். மாலை அணிவித்து வரவேற்பு

அதன்படி பாரம்பரிய உணவுகளான பயிறு வகைகள், ஆவியில் அவித்த உணவுகள் உள்ளிட்டவைகளை சமைத்து மாணவர்களிடையே பழங்கால உணவின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்கள் எடுத்துக் கூறினர். இதனைத்தொடர்ந்து பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.