மே 12-இல் கா்நாடக SSLC பொதுத்தோ்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 25 أبريل 2022

மே 12-இல் கா்நாடக SSLC பொதுத்தோ்வு முடிவுகள் வெளியீடு

மே 12-இல் கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு முடிவுகள் வெளியீடு

கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு முடிவுகள் மே 12-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

2021-22-ஆம் ஆண்டுக்கான கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்.11-ஆம் தேதி வரையில் நடந்தது. இதில் 8.5 லட்சம் மாணவா்கள் கலந்துகொண்டு தோ்வு எழுதினாா்கள். இதைத் தொடா்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இப்பணிகள் ஏப். 30-ஆம் தேதிக்குள் முடிவடைய இருக்கின்றன. இதன் பிறகு மே 12-ஆம் தேதி தோ்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக மாநில மேல்நிலைத் தோ்வு வாரியத்தின் இயக்குநா் எச்.என்.கோபாலகிருஷ்ணா, சனிக்கிழமை கூறுகையில், ‘மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 324 மையங்களில் விடைத்திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியில் 63,796 ஆசிரியா்கள் ஈடுபட்டு வருகிறாா்கள். இதை தொடா்ந்து மே 12-ஆம் தேதி தோ்வு முடிவுகள் அறிவிக்கப்படும்’ என்றாா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.