ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 1 مارس 2022

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

நியாயவிலை கடைகள் செயல்படும் வேலை நேரம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

இதையும் படிக்க | ₹3 லட்சம் வரையிலான நிதியுதவியை பெற Ph.D., பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8:30 - 12:30 மணி, பிற்பகல் 3 - 7 மணி வரையிலும், இதர பகுதிகளில் காலை 9 - 1 மணி, பிற்பகல் 2 மணி - 6 மணி வரை செயல்படும் என தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் காலை 8:30 முதல் 12:30 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் 7 மணி வரையிலும் செயல்படும். இதர பகுதிகளில் காலை 9 முதல் 1 மணி வரை, பிற்பகல் 2 முதல் 6 மணி வரையிலும் செயல்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தில் நியாயவிலை கடைகள் செயல்பட வேண்டும் என்றும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும், நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்த விவரத்தை குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வண்ணம் நியாய விலைக் கடையின் தகவல் பலகையில் காட்சிபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.