குரூப்-4 தேர்வு குறித்து TNPSC தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 23, 2022

குரூப்-4 தேர்வு குறித்து TNPSC தகவல்

குரூப்-4 தேர்வு குறித்த தவறான அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவுவதாகவும், அதை விண்ணப்பதாரர்கள் நம்ப வேண்டாம் என்றும் டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு குறித்த தவறான அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம். தேர்வாணையத்தின் அனைத்து அறிவிப்புகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.