கல்விக்கு போதிய நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை - ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 2 فبراير 2022

கல்விக்கு போதிய நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை - ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு

மத்திய பட்ஜெட்டில் கல்விக்கு போதிய நிதி ஒதுக்கப்பட வில்லை என்று, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றம்சாட்டி யுள்ளது.

இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத் திய நிதியமைச்சர் நிர்ம லாசீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பாகவே இந்த பட்ஜெட் உள்ளதாக பெரும்பாலோனோர் தெரிவித்தனர். ஜிஎஸ்டி, ரூபாய் நோட்டு செல்லாத தாக அறிவிக்கப்பட்ட பிறகு நலிவடைந்துள்ள சிறுதொழில், இப்பிரச்சி னையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான திட் டங்கள், இளைஞர்களுக் கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் குறித்து எவ்வித அறி விப்பும் பட்ஜெட்டில் இல்லை.

வழக்கம்போல் விவசாயத்திற்கு முக்கியத் துவம் அளிக்கப்பட்டது போல் அறிவிப்புகள் இரு தாலும் ஏற்கனவே இந்த அரசின் பட்ஜெட்டிலும் விவசாயத்திற்கு முக்கி யத்துவம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வழக்கம் போல் ஏமாற்றமே அளித் தது என்பதால் விவசாயி கள்இது வெற்று அறிவிப்பு என்றே பார்க்கின்றனர்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறு கையில், விலைவாசி கடு மையாக உயர்ந்துள்ள நிலையில் மாத ஊதி யம் பெறும் ஊழியர்கள் வாழ்க்கையோடு போரா டிக் கொண்டிருக்கும் காலச்சூழலில், இந்த பட்ஜெட்டிலாவது தனிந பர் வருமானவரி உச்சவ ரம்பு உயர்த்தப்படும் என பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஏற்கனவே வருமான வரி வரம்பு உயர்த்தப்ப டாததால் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் ஆண்டிற்கு 12 மாத ஊதி யத்திற்கு பதிலாக 11 மாத ஊதியம் மட்டுமே பெற்று வருகின்றனர்.

கார்ப்ப ரேட் நிறுவனங்கள் பற்றி சிந்திக்கும் மத்திய அரசு மாத ஊதியம் பெறும் ஊழியர்களின் நலன்கள் பற்றி சிறிதும் சிந்திக்கா ததுபெரும் அதிருப்தியை அளித்துள்ளது. கல்விக் கான நிதி ஒதுக்கீடு போது மான அளவில் இல்லை என்பது தேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு எதிர் பார்த்த பலனை தராது என்பதையே காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளின் பட்ஜெட் அறிவிப்புக ளோடு ஒப்பிட்டு பார்க் கும்பொழுது வெற்று அறி விப்புகளாகவே தெரிகிறது என்றார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.