நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் தொடங்கியது..!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 7 فبراير 2022

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் தொடங்கியது..!!

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் தொடங்கியது. நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை புனிதஜார்ஜ் கோட்டையில் நடக்கும் சட்டமன்ற கூட்டம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கடந்தாண்டு செப்டம்பர் 13ல் நீட் தேர்வில் விலக்கு கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 142 நாட்களுக்கு பின் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 1ம் தேதி சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார்.

சட்டமுன்வடிவை மறுபரிசீலனை செய்யும்படியும் ஆளுநர் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடக்கிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு பரிந்துரையை அடிப்படையாக கொண்டு நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளில் சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நடைபெறுவது இது 5வது முறையாகும். இதையும் படிக்க | Teachers Transfer Counselling Today Schedule ( 08.02.2022 )

சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதன்மூலம் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மாணவர்கள் விலக்கு பெற மசோதா வழிவகை செய்யும். பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்பில் தமிழக மாணவர்கள் சேர மசோதா வழிவகை செய்கிறது. மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சட்டப்பேரவையில் சபாநாயகர் வாசித்தார். உயர்மட்டக்குழுவின் அறிக்கை ஏற்கத்தக்கதாக இல்லை என ஆளுநர் கூறியுள்ளார் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.