அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அஞ்சல் வாக்குகள் அதிகரிக்க அரசு என்ன செய்ய வேண்டும்? 20 அம்ச கோரிக்கைகள் - எழுத்தாளர் மணி கணேசன் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 18, 2026

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அஞ்சல் வாக்குகள் அதிகரிக்க அரசு என்ன செய்ய வேண்டும்? 20 அம்ச கோரிக்கைகள் - எழுத்தாளர் மணி கணேசன்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் அஞ்சல் வாக்குகள் 2026 தேர்தலில் குறைந்தது ஏன்? மதுராந்தகம் தாராபுரம் புள்ளிவிவரம், பழைய ஓய்வூதியம் உட்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றினால் அஞ்சல் வாக்கு அதிகரிக்கும் - மணி கணேசன் கட்டுரை.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அஞ்சல் வாக்குகள் அதிகரிக்க அரசு என்ன செய்ய வேண்டும்? 20 அம்ச கோரிக்கைகள் - மதுராந்தகம் தாராபுரம் புள்ளிவிவரம்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் அஞ்சல் வாக்குகள் 2026 தேர்தலில் குறைந்தது ஏன்? மதுராந்தகம் தாராபுரம் புள்ளிவிவரம், பழைய ஓய்வூதியம் உட்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றினால் அஞ்சல் வாக்கு அதிகரிக்கும் - மணி கணேசன் கட்டுரை.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அஞ்சல் வாக்குகள் அதிகரிக்க இந்த அரசு என்ன செய்ய வேண்டும்?

அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்குகள் 20 அம்ச கோரிக்கைகள்

ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தாம் தெரிந்து செய்யும் தம் தவறுகளை மறைத்து தாங்கள் தூய சக்திகள் என்று நிரூபிக்க அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பலிகடாக்கள் ஆக்குவது தொன்றுதொட்டு நடந்து வருவது அறியத்தக்கது.

தற்போது அத்தகைய நோக்கும் போக்கும் மலிந்து வருவது வேதனைக்குரியதாக உள்ளது. இதற்கு முட்டுக்கொடுக்கும் வகையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் உள்நோக்கத்துடன் செயல்படும் ஊடகவாதிகளும் அதிகாரிகளை மட்டும் குற்றம் சாட்டுவது நகைப்பிற்குரியது.

2026 சட்டமன்ற தேர்தல் - ஒரு விசித்திரமான தேர்தல்

கடந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் ஒரு விசித்திரமான தேர்தலாகும். திராவிட கட்சிகளின் தொடர் ஆட்சியின் மீதான வெறுப்பும் சலிப்பும் முக்கிய காரணங்கள் ஆகும்.

திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரோத போக்குகளால் பவளவிழா மற்றும் பொன்விழா கட்சிகளின் மீது தீராத வெறுப்பு கொண்டு அஞ்சல் வாக்குகளாகப் போய் குவிந்தன.

📊 மதுராந்தகம் மற்றும் தாராபுரம் அஞ்சல் வாக்கு புள்ளிவிவரம்

மதுராந்தகம் தொகுதி:
2026 பொதுத் தேர்தலில் மொத்தம் பதிவான 1962 வாக்குகளில் ஆளும் கட்சி 352, திமுக 790, அதிமுக 740, நாதக 53, மற்றவை 27.

இடைத்தேர்தலில் மொத்தம் 864 வாக்குகளில் திமுக 358, அதிமுக 322, தவெக 137, மற்றவை 47.

தாராபுரம் தொகுதி:
2026 பொதுத்தேர்தலில் மொத்தம் 2351 வாக்குகளில் திமுக 1037, அதிமுக 852, தவெக 339, நாதக 90, மற்றவை 33.

இடைத்தேர்தலில் மொத்தம் 1316 வாக்குகளில் திமுக 613, அதிமுக 406, தவெக 255, நாதக 19, மற்றவை 23.

இவ்விரண்டு புள்ளி விவரங்கள் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நம்பிக்கையினையும் நம்பகத்தன்மையையும் தற்போதைய ஆளும் அரசு பெற மேலும் முயற்சி காட்ட வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

✅ ஆசிரியர்களின் 20 அம்ச முதன்மை கோரிக்கைகள்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பன்னெடுங்கால அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகள்:

1. பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)

2. மத்திய அரசுக்கு இணையான ஊதிய நிர்ணயம்

3. ஊக்க ஊதிய உயர்வு

4. பணிப் பாதுகாப்புச் சட்டம்

5. தணிக்கைத் தடைகள் நீக்கம்

6. பதவி உயர்வு கலந்தாய்வு

7. தகுதித் தேர்வு விலக்கு

8. புதிய பணி நியமனம்

மற்றும் ஏனைய முக்கிய கோரிக்கைகள்.



ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தாம் தெரிந்து செய்யும் தம் தவறுகளை மறைத்து தாங்கள் தூய சக்திகள் என்று நிரூபிக்க அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பலிகடாக்கள் ஆக்குவது என்பது தொன்றுதொட்டு நடந்து வருவது அறியத்தக்கது.

தற்போது அத்தகைய நோக்கும் போக்கும் மலிந்து வருவது வேதனைக்குரியதாக உள்ளது. இதற்கு முட்டுக்கொடுக்கும் வகையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் உள்நோக்கத்துடன் செயல்படும் ஊடகவாதிகளும் அதிகாரிகளை மட்டும் குற்றம் சாட்டுவதும் ஆளும் வர்க்கத்துக்கும் இதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதாகப் பரப்பப்படும் மக்கள் விரோத செயல்கள் அனைத்திற்கும் காரணம் கற்பிப்பது என்பது நகைப்பிற்குரியது.

குறிப்பாக, எந்தவொரு அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தாமே முன்வந்து இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றில் ஈடுபடுவதாக அறியப்பட முடியவில்லை. இவர்கள் அரசியல்வாதிகளால் நேரிடையாகவும் மறைமுகமாகவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. நேர்மையாகச் செயல்படும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செல்வாக்குள்ளவர்களால் எத்தகைய கொடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது நாடறிந்ததே. சிலர் பரிதாபமாக இதன் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் என்பது ஒரு விசித்திரமான தேர்தலாகும். ஒரு புதிய மாற்றம் நிகழாதா என்று எல்லா தரப்பினரும் ஏங்கித் தவித்தக் காலகட்டத்தில் யாரும் எதிர்பாராத ஒரு புத்தம் புதிய அரசு முடிசூட்டிக் கொண்டது. திராவிட கட்சிகளின் தொடர் ஆட்சியின் மீதான வெறுப்பும் சலிப்பும் முக்கிய காரணங்கள் ஆகும்.

மேலும், திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரோத போக்குகளால் பவளவிழா மற்றும் பொன்விழா கட்சிகளின் மீது தீராத வெறுப்பும் அவநம்பிக்கையும் கொண்டு சக மனிதர்கள் போல் அடிமனதில் தளும்பிய திரைக் கவர்ச்சி மற்றும் நாயக மோகம் காரணமாகப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தவர்கள் பலரும் தடம் புரண்டதால் அவை பொதுத்தேர்தலில் அஞ்சல் வாக்குகளாகப் போய் குவிந்தன.

தமக்கு ஒரு 'மீட்பர்' கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்டோர் அனைவரும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து ஒரு விரல் புரட்சி செய்ய தயாராகி இருந்ததை பின்வரும் புள்ளிவிவரங்கள் வழி காணவியலும்.

மதுராந்தகம் தொகுதியில் 2026 - பொதுத் தேர்தலில் மொத்தம் பதிவான 1962 வாக்குகளில் தற்போதைய ஆளும் கட்சி 352 வாக்குகளும் எதிர்கட்சிகளான திமுக, அதிமுக முறையே 790, 740 வாக்குகளும் நாதக 53, மற்றவை 27 வாக்குகளும் இடைத்தேர்தலில் மொத்தம் பதிவான 864 வாக்குகளில் திமுக 358, அதிமுக 322, தவெக 137, மற்றவை 47 வாக்குகள் பெற்றுள்ளது நோக்கத்தக்கது.

அதேபோல், தாராபுரத்தில் 2026 இல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மொத்தம் பதிவான 2351 வாக்குகளில் திமுக 1037, அதிமுக 852, தவெக 339, நாதக 90 மற்றவை 33 வாக்குகளும் இடைத்தேர்தலில் மொத்தம் பதிவான 1316 வாக்குகளில் திமுக 613, அதிமுக 406, தவெக 255, நாதக 19, மற்றவை 23 வாக்குகளும் பெற்றுள்ளது ஒப்பு நோக்கத்தக்கது.

இவ்விரண்டு புள்ளி விவரங்கள் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நம்பிக்கையினையும் நம்பகத்தன்மையையும் தற்போதைய ஆளும் அரசு பெற மேலும் முயற்சியும் முனைப்பும் காட்ட வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இந்திய மக்களாட்சி தேர்தல் நடைமுறையில் ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியமாகிறது. தற்போதைய ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஒற்றை வாக்கில் வெற்றி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்கை தனிநபர் வாக்காக மட்டும் கருதாமல் பல்வேறு குடும்ப நபர்கள் உள்ளடக்கிய கூட்டு வாக்காகப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். ஆக, அதற்கேற்ப அத்தகையோரின் நம்பத்தகுந்த பாதுகாவலராகத் தம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியது ஏனைய கட்சிகளைக் காட்டிலும் ஆளும் கட்சிக்கு அதிக கடப்பாடு உள்ளது. அரசின் அனைத்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செவ்வனே நிறைவேற்றும் இடத்தில் இவர்கள் தாம் இருக்கின்றனர்.

தவிர, நடுத்தர வர்க்கத்தினராக மாத ஊதியத்தை மட்டும் நம்பி வாழும் இவர்களுக்கு அரசு ஊழியர் என்ற முத்திரை குத்தி எந்தவொரு நலத் திட்ட உதவிக்கும் தகுதியற்றவர்களாக இவர்களும் இவர்களது குடும்பத்தினரும் ஆக்கப்படுவது அறியத்தக்கது. பொதுமக்களுக்குப் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகள் செய்வதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எந்தவொரு மாறுபட்ட கருத்துகளும் எப்போதும் இருந்தது கிடையாது.

அதேபோல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் தம் நடைமுறை வாழ்க்கையில் ஓரளவு கண்ணியத்துடன் வாழ அவர்களது வாழ்வாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் இடத்தில் அரசு இருப்பதை பொதுமக்களும் உணர்வது மிக அவசியம்.

ஓர் அரசு இருதரப்புக்குமானது. ஒரு தரப்பினரைப் பட்டினிப் போட்டு விட்டு இன்னொரு தரப்பினருக்கு மட்டும் கஞ்சி வார்க்க நினைப்பது என்பது துரதிர்ஷ்டவசமானது.

அரசின் அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அனைத்துவித சலுகைகளும் வாகன வசதிகளும் வீட்டுவேலை செய்ய பல்வேறு பணியாளர்களும் பொதுமக்கள் வரிப்பணத்தில் ஆட்சி செய்யும் அரசுவழிக் கிடைக்கப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பி, சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் யாருக்கும் மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியம் தவிர ஏனைய எந்தவொரு சலுகையும் அரசால் வழங்கப்படுவதில்லை என்பது உணரத்தக்கது.

அவ்வப்போது அரசால் வழங்கப்படும் முன்பணக் கடன்கள் பலவும் சம தவணைகளாக மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு விடும். எனவே, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பன்னெடுங்கால அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகள் இன்னும் தீர்வு எட்டப்படாமல் இருப்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பாக, பழைய ஓய்வூதியம், மத்திய அரசுக்கு இணையான ஊதிய நிர்ணயம், ஊக்க ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்புச் சட்டம், தணிக்கைத் தடைகள், பதவி உயர்வு கலந்தாய்வு, தகுதித் தேர்வு விலக்கு, புதிய பணி நியமனம் உள்ளிட்ட ஆசிரியர் சங்கங்கள் கோரும் முதன்மையான 20 அம்ச கோரிக்கைகளை ஆளும் வெற்றி அரசு நிறைவேற்ற நிச்சயம் முன்வர வேண்டும். அப்போதுதான் இந்த அரசு மீது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். அதுமட்டுமின்றி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அஞ்சல் வாக்குகள் எதிர்வரும் காலங்களில் இந்த நல்லெண்ண நடவடிக்கைகள் காரணமாக மெல்ல அதிகரிக்கக் கூடும் என்பது திண்ணம்.

இந்த 20 அம்ச கோரிக்கைகளை ஆளும் வெற்றி அரசு நிறைவேற்றினால் தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். அஞ்சல் வாக்குகள் எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கக் கூடும் என்பது திண்ணம்.

எழுத்தாளர்: மணி கணேசன்
நன்றி: திறவுகோல் ஐப்பசி மாத இதழ்

மதுராந்தகம் 2026 தேர்தல், தாராபுரம் இடைத்தேர்தல், திமுக அதிமுக தவெக வாக்குகள், அரசு ஊழியர் விரோத போக்கு, திராவிட மாடல் ஆட்சி, பணிப் பாதுகாப்பு சட்டம், மத்திய அரசுக்கு இணையான ஊதியம், ஊக்க ஊதிய உயர்வு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.