சிறப்பு TET தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இடைக்காலத் தடை நீட்டிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 24, 2026

சிறப்பு TET தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இடைக்காலத் தடை நீட்டிப்பு.

📢📢📢 முக்கிய அறிவிப்பு 📢📢📢

⚖️ உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இயக்கங்களின் சார்பில், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர் சகோதரர்கள் திரு. S. பாலமுருகன், திரு. ஆ. சுப்பிரமணியன், திரு. க. இராஜேஸ்வரன், திரு. க. மணிமுத்து ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

📌 வழக்கின் முக்கிய கோரிக்கைகள்:

✅ உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடர்பில்லாத TET Paper-I-இல் இருந்து விலக்கு / நிவாரணம் வழங்குதல்.

✅ 9 & 10 ஆம் வகுப்புகளுக்கு தொடர்பில்லாத TET Paper-II-இல் இருந்து விலக்கு / நிவாரணம் வழங்குதல்.

✅ 6–8 வகுப்புகளில் கற்பிக்கும் பாடத்திற்கு தொடர்பில்லாத பாடங்களில் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தை நீக்குதல்.

✅ பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சம மதிப்பெண் தளர்வு வழங்குதல் அல்லது TET-க்கு இணையான பணியிடைப் பயிற்சி வழங்குதல்.

✅ மேற்கண்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காண வல்லுநர் குழு அமைத்தல்.

⚖️ இவ்வழக்கு, நீதிமன்ற அறை எண் 07-ல் மாண்புமிகு நீதியரசர் மும்முனேனி சுதீர்குமார் அவர்கள் முன்னிலையில் 20-வது வழக்காக விசாரணைக்கு வந்தது.

👨‍⚖️ ஆசிரியர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரு. பன்னீர்செல்வம் ஆஜராகினார்.

🏛️ அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், TRB சார்பில் வழக்கறிஞர் பிற்பகல் 2.15 மணிக்கு ஆஜராகி வாதிட அனுமதி கோரினார்.

✅ இதனை ஏற்ற மாண்புமிகு நீதியரசர் அவர்கள், வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.

⚖️ பிற்பகல் 2.15 மணிக்கு:

🔹 TRB தரப்பில், உச்சநீதிமன்றம் மற்றும் NCTE உத்தரவுகளின் அடிப்படையிலேயே சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படுவதாகவும், எனவே வழக்கை தொடக்க நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

🔹 அதற்கு பதிலளித்த ஆசிரியர்கள் தரப்பின் மூத்த வழக்கறிஞர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள்:

✅ 6–8 வகுப்பு ஆசிரியர்களுக்கு Paper-I நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை.

✅ 9–10 வகுப்பு ஆசிரியர்களுக்கு TET நடத்துமாறு உச்சநீதிமன்றமோ, NCTE-யோ உத்தரவிடவில்லை.

✅ மாநில அரசு பாடத்திட்டத்தை குறைக்கவோ, மதிப்பெண் தளர்வு வழங்கவோ முடியாது என்று NCTE எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

✅ எனவே, வழக்கை ஏற்று, ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

🎯 ஆசிரியர்கள் தரப்பின் வாதத்தை ஏற்ற மாண்புமிகு நீதியரசர் அவர்கள்:

📌 தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர்

📌 பள்ளிக்கல்வி இயக்குநர்

📌 SCERT இயக்குநர்

📌 TRB உறுப்பினர்-செயலர்

*ஆகியோர் 10 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 03.08.2026 அன்று மீண்டும் விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளார்.*


சிறப்பு TET தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இடைக்காலத் தடை நீட்டிப்பு.

சிறப்பு TET தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இடைக்காலத் தடை உத்தரவு 2026 ஆகஸ்ட் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கருணை மதிப்பெண் (grace mark) வழங்குவது குறித்து முடிவெடுக்க அரசு கூடுதல் அவகாசம் கோரியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

வேறு சில தரப்பினர் தாக்கல் செய்த புதிய மனு அனுமதிக்கப்பட்டது.

அடுத்தகட்ட விசாரணை வழக்கம் போல் 2026 ஆகஸ்ட் 24 அன்று நடைபெறும். கருணை மதிப்பெண் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) முடிவுகளை வெளியிடுவதற்கான இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டதைப் போல, பொதுப்பிரிவைச் சேர்ந்த மூத்த ஆசிரியர்களுக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணில் 5% தளர்வு (60%-லிருந்து 55%-ஆகக் குறைப்பு) வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவினருக்கான மதிப்பெண் தளர்வு குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டியுள்ளதால், நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அல்லது அரசின் முடிவு வெளியாகும் வரை தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும்.

சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, பணிபுரியும் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) முடிவுகளை வெளியிடுவதற்கான இடைக்காலத் தடை அமலில் உள்ளது.

பொதுப்பிரிவைச் சேர்ந்த மூத்த ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்றம் இந்தத் தடையை விதித்துள்ளது

வழக்கின் முக்கியப் பின்னணிமதிப்பெண் தளர்வு கோரிக்கை: பிற்படுத்தப்பட்ட (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC), மற்றும் சீர்மரபினர் (DNC) பிரிவினருக்குக் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணில் 5% தளர்வு வழங்கப்பட்டுள்ளது போல, பொதுப்பிரிவினருக்கும் தகுதி மதிப்பெண்ணை 60%-லிருந்து 50%-ஆகக் குறைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீதிமன்றத்தின் கேள்வி: புதிய பணி நியமனங்களின் போது நேரடி ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் மூத்த ஆசிரியர்களுக்கு TET தேர்வில் ஏன் எந்தச் சலுகையும் வழங்கப்படவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசின் கொள்கை முடிவு: பொதுப்பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களைக் குறைப்பது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டியுள்ளதால் கால அவகாசம் தேவை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்தச் சிறப்புத் தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகள் (Tentative Answer Key) அண்மையில் வெளியிடப்பட்டு, ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளன.

தமிழக அரசின் கொள்கை முடிவும் மற்றும் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவும் வெளியான பிறகே அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகள் Teacher Recruitment Board (TRB) இணையதளத்தில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.