ஆசிரியர் காலிப் பணியிட விவரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு - Director Proceedings
அனைத்து வகை ஆசிரியர்களின் காலிப் பணியிட விவரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!
Joint Director of School Education orders the uploading of vacancy details for all categories of teachers on the EMIS portal!!
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 1625 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களையும், 125 கணினி பயிற்றுநர் பணியிடங்களையும் காலிப் பணியிடங்களாக கருதி பதிவேற்றம் செய்யஉத்தரவு!!!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் சென்னை-6
ந.க.எண்.032782 / சி3 / இ1 / 2026 நாள்.16.06.2026
பொருள்:-
பள்ளிக் கல்வி -2026-27ம் ஆண்டு அனைத்துவகை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - நடத்துதல் அனைத்துவகை ஆசிரியர்களின் நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல் சார்பாக.
பார்வை:-
கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6 1.தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் 5.5.06.032782/83 /81/2026 08.06.2026
009324/41/2026.08.06.2026
رم
2.இவ்வியக்கக இதே எண்ணிட்ட செயல்முறைகள் . 10.6.2026
பார்வை-1ல் காணும் செயல்முறைகளில் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் சார்பாக 2026-27 ஆண்டிற்கான அனைத்துவகை ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்விற்கான காலஅட்டவணை மற்றும் மாறுதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தல் சார்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பார்வை-2ல் காணும் செயல்முறைகளில் கலந்தாய்விற்கான காலஅட்டவணையில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு திருத்திய கலந்தாய்விற்கான காலஅட்டவணை அனுப்பிவைக்கப்பட்டது.
மேற்படி கலந்தாய்விற்கான காலஅட்டவணையில் 25.06.2026 வெளியிடப்படும் 61601 அன்று காலிப்பணியிடங்கள் EMIS online தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, தங்கள் மாவட்டங்களில் இன்றைய நிலவரப்படி காலியாக உள்ள அனைத்துவகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை EMIS Websiteல் அந்தந்த மாவட்டத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள Login ID ஐ பயன்படுத்தி 23.06.2026க்குள் பதிவேற்றம் செய்திடுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
ஆசிரியர்களின் /மேலும் அனைத்துவகை தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரங்களை EMIS Websites பதிவேற்றம் செய்யும்போது கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்பட தெரிவிக்கலாகிறது.
1. தற்காலிக பணிநீக்கத்தில் உள்ள ஆசிரியர்களது பணியிடங்கள் (பிழைப்பூதியம் பெற்று வழங்கப்படுவதால்)
2. மகப்பேறு விடுப்பில் உள்ள ஆசிரியர்களது பணியிடங்கள்
3. மாற்றுப்பணியில் வேறு பள்ளி (அ) அலுவலகத்தில் பணிபுரிவோர் பணியிடங்கள்
4. முறையாக மருத்துவ விடுப்பு விண்ணப்பித்து மருத்துவ விடுப்பில் உள்ள ஆசிரியர்களது பணியிடங்கள்
5. கூடுதல் தேவையுள்ள பணியிடங்கள் (Needy schools should not be shown as vacancy)
6. 01.08.2025 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரியாக உள்ள श्री (Surplus post without person PG-BT-SGT)
மேற்காண் 6 இனங்களில் உள்ள பணியிடங்களை எக்காரணம் கொண்டும் காலிப்பணியிடமாக பதிவேற்றம் செய்தல் கூடாது.
176 (1) General Conditions para (b) தெரிவித்துள்ளவாறு ஒரு மாதத்திற்கு மேல் எவ்வித தகவலுமின்றி (Unauthorised absence) வருகைபுரியாமல் உள்ள ஆசிரியர்களின் பணியிடங்களை பொதுமாறுதல் கலந்தாய்வில் காலிப்பணியிடமாக கருதலாம்.
இதன் தொடர்ச்சியாக அரசாணை எண்.78 ப.க.து. நாள்.12.3.2026ன்படி புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தினையும் காலிப்பணியிடமாக கருதலாம். மேலும் அரசாணை எண்.93 ப.க.து. நாள்.13.03.2026 ன்படி தோற்றுவிக்கப்பட்ட 125 கணினிபயிற்றுநர் நிலை-1 பணியிடங்களையும் காலிப்பணியிடமாக கருதலாம்.
முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வு நடைபெறவுள்ளதால் பணிநிரவல் பொறுத்தவரையில் இப்பணியிடங்களுக்கு 01.08.2025 நிலவரப்படி கணக்கிட்டப்பட்டதில் கூடுதல் தேவையுள்ள பணியிடங்களையும் EMIS Websiteல் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். இக்கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின் (Need post) விவரம் பணிநிரவல் கலந்தாய்விற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். பொதுமாறுதல் கலந்தாய்விற்கு காண்பிக்கப்படமாட்டாது.
மேற்காண் அறிவுரைகளை பின்பற்றி எவ்வித தவறுகளும் இன்றி அனைத்துவகை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை EMIS Websiteல் பதிவேற்றம் செய்திடுமாறு மீளவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. காலிப்பணியிட விவரங்களை EMIS Websiteல் பதிவேற்றம் செய்தபிறகு அதன் ஒரு பிரதியினை நகலெடுத்து முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்பத்துடன் பதவி வாரியாக (Category wise) 26.6.2026க்குள் இவ்வியக்ககத்திற்கு விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பிவைத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காலிப்பணியிட விவரங்கள் EMIS ல் இறுதியாக வெளியிடப்பட்ட பின்னரோ (அ) கலந்தாய்வு நடைபெறும் நாளன்றோ காலிப்பணியிடங்களை எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யவோ, திருத்தங்கள் செய்யவோ, சேர்க்கை செய்யவோ அனுமதிக்கப்படமாட்டாது. அவ்வாறு ஏதேனும் ஏற்படின் இதற்கு முழுப்பொறுப்பும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களையே சாரும் என்பததோடு மட்டுமல்லாமல் உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்பதை கவனத்தில் கொண்டு அனைத்துவகை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை சரியாக பதிவேற்றம் செய்திடுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பள்ளிக் கல்வி இணை மா (பணியாளர் தொகுதி) 1616
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்
(மின்னஞ்சல் மூலமாக)
(W1, W2, W3, C1, C2, C3, C4, C5, V1)
الجمعة، 19 يونيو 2026
New
ஆசிரியர் காலிப் பணியிட விவரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு - Director Proceedings
Joint Director of School Education
Tags
Director of School Education,
DSE,
DSE PROCEEDINGS,
EMIS,
EMIS New Updates,
EMIS News,
EMIS TEAM,
EMIS UPDATES,
EMIS website,
Joint Director of School Education
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)


ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.