கல்வி கட்டணம் கருப்பு பணம் அல்ல - அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை, ஜூன் 6: தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை பள்ளிகளின் அறி விப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என்ற மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனரகம் ஆகி யவை பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்ய மறுத்த உயர் நீதிமன்றம், கல்வி கட்டணம் கருப்பு பணம் அல்ல. நியாய மாக வாங்கும் கட்டணத்தை அறிவிப்பு செய்வதில் எந்த தவறும் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
தனியார் மெட்ரிகுலேஷன், மேல் நிலைப் பள்ளிகளில் அரசு நிர்ணயித் துள்ள கட்டணங்கள் தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், மாணவர்கள் கல்விக் கட்டண விவகாரத்தில் கல்வி நிறுவனங்க ளின் வெளிப்படைத்தன்மை மிக அவசியம் எனக் குறிப்பிட்டு, அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் விளம்பர பலகைகளில் விளம்பரப்படுத் துவதையும்,மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்திலும் வகுப்பு வாரி யாக கட்டணத்தை அச்சிட்டு வழங்குவதை யும் கட்டாயமாக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு உத்தரவிட்டது.
அதன்படி, ஜூன் 5ம் தேதிக்குள் கட் டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடுமாறு அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக் குனர் ஜூன் ஒன்றாம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவையும், அதன்படி தனியார் பள்ளிகள் இயக்கு னர் பிறப்பித்த அறிவிப்பை யும் ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் துள்ளார். இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்ட பாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தகவல் உரிமைச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிபிஎஸ்இ போன்ற மத்திய அரசின் பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது என்று வாதிட்டார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தகவல் ஆணைய உத்தர வின் அடிப்படையில் கல்வி கட்டணத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனிப்பட்ட பள்ளிகள் தான் வழக்கு தொடர முடியும். சங்கத்தின் சார்பில் வழக்கு தொடர முடி யாது. விதிகளின்படி பள்ளிகள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கட்டண விகிதங்களை வெளியிட மறுக்க முடியாது.கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல என்பதால் அதன் விவரங்களை தெரிவிக்கலாமே என்று கருத்து தெரிவித்து, வழக்கு குறித்து ஜூன் 18ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசார ணையை தள்ளிவைத்தார்
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு அரசு பதிலளிக்க உத்தரவு
This article discusses a legal case challenging the Tamil Nadu government's order requiring private schools to display fee structures on notice boards.
The Tamil Nadu High Court ordered the state government to respond to a petition opposing this mandate.
The petitioner argued that educational institutions are not subject to the Right to Information Act in the same manner as public authorities.The hearing was adjourned to June 18 for the government to submit its response.
தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்ற தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிரான வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான முக்கிய விவரங்கள்:
வழக்கின் பின்னணி: மாணவர்கள் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கவும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும் அனைத்து தனியார் பள்ளிகளும் கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகைகளில் வெளியிடுமாறு மே 25 அன்று தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
மனுதாரர் தரப்பு: இந்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. தனியார் பள்ளிகள் மீது தகவல் ஆணையத்திற்கு நேரடி அதிகார வரம்பு இல்லை என்று வாதிடப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு: வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது
கல்விக் கட்டணம் கருப்புப் பணம் அல்ல- நீதிபதி:
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தகவல் அறியும் உரி மைச் சட்டத்தில் விலக்கு அளிக்கும் பிரிவில்கூட, பொதுநலன் சார்ந்த விவ ரங்களை வெளியிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கல் விக் கட்டண விவரங்களை வெளியிட மறுக்க முடியாது. கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல, எனவே அதுகுறித்த விவரங்களை வெளியிட லாமே? என நீதிபதி தெரிவித்தார். பின் னர், இந்த மனுவுக்கு தமிழக அரசு வரும் ஜூன் 18-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்


ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.