பொறியியல் படிப்புக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்: ஜூன் 29-ல் தரவரிசைப் பட்டியல் 3 lakh people apply for engineering courses: Rank list on June 29
பொறியியல் படிப்பில் சேர 3 லட்சத்து ஆயிரத்து 509 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். தரவரிசைப் பட்டியல் ஜூன் 29-ம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பொறியில் கல்லூரிகளில் இந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மே 3-ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்றே 8,505 பேர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 2-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், கடைசி தேதி ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 3 லட்சத்து ஆயிரத்து 519 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்ப தாகவும் அவர்களில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 476 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும், 2 லட்சத்து 23 ஆயிரத்து 599 பேர் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள், சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய இன்று (சனிக்கிழமை) வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூன் 29-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு தொடங்கும் தேதி அன்றைய தினம் அறிவிக்கப்படுகிறது

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.