பழைய பென்ஷன் திட்டம் பெஸ்ட்! அரசு ஊழியர்கள் அரசுக்கு வேண்டுகோள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 18 يونيو 2026

பழைய பென்ஷன் திட்டம் பெஸ்ட்! அரசு ஊழியர்கள் அரசுக்கு வேண்டுகோள்



This Tamil newspaper article highlights calls for the Tamil Nadu government to reinstate the old pension scheme.

Teachers and government employees are opposing the new "TAPS" pension plan, arguing it provides less security.

The article discusses the financial implications for the state government and the employees' demand for security after retirement.

பழைய பென்ஷன் திட்டம் பெஸ்ட்! அரசு ஊழியர்கள் அரசுக்கு வேண்டுகோள் Old Pension Scheme is the Best! Government Employees Appeal to the Government

தமிழக அரசிசன்னை, பென்ஷன் திட்டம், அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். பழைய பென்ஷன் திட்டம், அரசுக்கு நிதிச்சுமையை குறைப்பதோடு, அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பானது. மேலும் சிபிஎஸ் திட்டத்துக்காக அரசு, வரும் காலத்தில் செலுத்த வேண்டிய பங்களிப்பும், அதன் மீது அரசு ஊழியர் களுக்கு திரும்ப வழங்கும் வட்டியில் கூடுதல் தொகையை செலுத்த வேண் டிய சுமையும் குறையும் என்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் கூறியுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழக்கத் தில் இருந்த பழைய பென்ஷன் திட் டத்துக்கு மாற்றாக, பங்களிப்புடன் கூடிய பென்ஷன் திட்டம் (சிபிஎஸ்) 2003 ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வந் தது. அதுமுதல் புதிய பென்ஷன் திட் டமான 'சிபிஎஸ்' திட்டத்தை எதிர்த் தும், மீண்டும் பழைய பென்ஷன் திட் டத்தை அமல்படுத்தக்கோரியும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன.

'டாப்ஸ்' வரலே திமுக எதிர்க்கட்சியாக இருந்த கையை ஏற்று, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று போது, அரசு ஊழியர்களின் வாக்குறுதி அளித்தது. ஆனால், பத விக் காலத்தின் கடைசியில் உறுதி யளிக்கப்பட்ட பென்ஷன் திட்டம் (டாப்ஸ்) அறிவித்தது. அது, கடந்த ஜனவரி 1ம் தேதியில் இருந்து அம லுக்கு வருவதாக அரசாணையும் வெளியிட்டது.

இதை செயல்படுத்த, ஒரு முறை மாற்று நிதியாக ரூ. 13 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தது. ஆனால் இதுவரை டாப்ஸ்' அமலுக்கு வரவில்லை. இதனால் கடந்த ஜனவரி முதல் ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு காலபணப்பலன்கிடைக்காமல்திண் டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக் கையை நேற்று வெளியிட்ட நிதி அமைச்சர் மரிய வில்சன், "திமுக அரசு கொண்டுவந்த 'டாப்ஸ்' திட்டம் அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத் தும்" என்றார். இதையடுத்து பழைய பென்ஷன் திட்டம் குறித்த விவாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அரசுக்கு ஆலோசனை

இந்நிலையில், பழைய பென்ஷன் திட்டம், அரசுக்கு செலவை குறைக் குமா? என்ற கேள்விக்கு, சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில நிர்வாகிகள் ஜெயராஜ ராஜேஸ்வரன், பிரெடெரிக் ஏங்கெல்ஸ், செல்வக்குமார், கண்ணன் ஆகியோர் கூறியது:

நாட்டில் இப்போதுள்ள சிபிஎஸ், என்பிஎஸ், யுபிஎஸ், டாப்ஸ் ஆகிய பென்ஷன் திட்டங்களைவிட பழைய பென்ஷன் திட்டமே (ஓபிஎஸ்) அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பானது. அர சுக்கும் அந்த திட்டம்தான் செலவை குறைக்கும். இதனால் ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர், இமாச்சல் பிர தேசம் போன்ற மாநிலங்கள் பழைய பென்ஷன் திட்டத்துக்கு திரும்பி யுள்ளன.

அவர்கள் என்பிஎஸ் திட்டத்தில் இருந்ததால் பணியாளர்கள் மற்றும் அரசின் பங்களிப்பு தொகை பிஎப்ஆர் டிஏவிடம் உள்ளது. இப்போது அதை மேற்கண்ட மாநிலங்களால் திரும்பப் பெற முடியவில்லை.

ஆனால், தமிழகம் என்பிஎஸ் திட் டத்தில் இல்லை. இங்கு சிபிஎஸ் திட் டம்தான் அமலில் உள்ளது. இதனால் தமிழக அரசு பிஎப்ஆர்டிஏவில் எந்த ஒப்பந்தமும் இல்லை. பங்களிப்பு தொகையும் பிஎப்ஆர்டிஏக்கு செலுத் தாமல் தமிழக அரசே தனது பொறுப் பில் வைத்துள்ளது.

தமிழகத்தில் சிபிஎஸ் திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 24 ஆயிரத்து 140 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களது பங்களிப்பு தொகை மற்றும் அரசின் பங்களிப்பு தொகையாக ரூ. 1.10 லட்சம் கோடி தமிழக அரசிடமே உள்ளது.

ரூ. 55 ஆயிரம் கோடி

எனவே 'டாப்ஸ்' திட்டத்தை நடை முறைப்படுத்தாமல், ஏற்கனவே அம லில் உள்ள சிபிஎஸ் திட்டத்தையும் கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத் துக்கு எளிதாக மாற முடியும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத் தினால், அரசு கையில் உள்ள பங்க ளிப்பு தொகையான ரூ. 1.10 லட்சம் கோடியில் அரசின் பங்குத்தொகை யாக ரூ. 55 ஆயிரம் கோடியை அரசு உடனடியாக திரும்ப பெற முடியும். அந்த நிதியை அரசின் பிற நட்டங்க ளுக்கு பயன்படுத்த முடியும். அரசு ஊழியர், ஆசிரியர்களின் பங்களிப்பு தொகையை ஜிபிஎப் நிதிக்கு மாற்ற லாம். பழைய பென்ஷன் திட்டம் அமல் படுத்துவதால் அரசின் பங்களிப்பு தொகையாக மாதமாதம் செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். சிபிஎஸ் திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்புத் தொகையை எல்ஐசியில் தமிழக அரசு முதலீடு செய்துள்ளது. முதலீடு செய்த பணத்துக்கு 6.5 சதவீதம் வீதம் தமிழக அரசுக்கு எல்ஐசி வட்டி வழங்குகிறது.

ஆனால் தமிழக அரசோ 6.5 சதவீத வட்டியை பெற்றுக் கொண்டு தொழி லாளர்கள் ஓய்வு பெறும் போது வழங் கப்படும் பங்களிப்பு தொகைக்கு 7.1 சதவீதம் வட்டியுடன் வழங்குகிறது. அதாவது அரசுக்கு கிடைக்கும் வட் டியை விட 0.6 சதவீதம் கூடுதலாக தமிழக அரசு செலவு செய்து வருகி றது. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதால் இந்த செலவும் இருக்காது.

30 ஆண்டு தள்ளிப்போகும்

சிபிஎஸ் திட்டத்தில் அரசு செலுத் தும் 10 சதவீத பங்கு தொகை என் பது ஆண்டுக்கு 2 முறை அகவிலைப் படி உயர்வு, ஆண்டு சம்பள உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கு 2 சம் பளஉயர்வு வழங்குவதால் அரசின் 10 சதவீத பங்களிப்பு தொகை உயர்ந்து கொண்டே இருக்கும். அடுத்த சம்பள கமிஷனில் சம்பள மாற்றம் வரும் போது குறைந்தபட்ச சம்பளம் இரட் டிப்பாக உயரும். இதனால் அரசின் பங்கீட்டு தொகையும் இரட்டிப்பாக உயரும்.

அமல்படுத்தினால் அரசு ஊழியருக்கு பென்ஷனுக்காக செய்ய வேண் டிய செலவு 30 ஆண்டுகள் தள்ளிப் போகும். அதாவது, இப்போது சிபிஎஸ் திட்டத்தில் உள்ள 6.24 லட் சம் அரசு ஊழியர், ஆசிரியர்களும் ஒரே நேரத்தில் ஓய்வு பெறப் போவ தில்லை. ஓய்வு பெற்ற பின்புதான் பழைய பென்ஷன் திட்டப்படி அரசு நிதி வழங்கும். எனவே பழைய பென் ஷன் திட்டத்தை அமல்படுத்துவதே, தமிழக அரசுக்கு பெரும் நிதிச் செல வைக் குறைத்து லாபம் தரும் பாது காப்பான திட்டமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.