காலாண்டு, அரையாண்டுத் தேர்வு, விடுமுறை நாட்கள் - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 16 يونيو 2026

காலாண்டு, அரையாண்டுத் தேர்வு, விடுமுறை நாட்கள் - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு



காலாண்டு, அரையாண்டுத் தேர்வு, விடுமுறை நாட்கள் - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு Quarterly, Half-yearly Examinations, Holidays - School Education Department Announcement

தமிழ்நாட்டில் செயல்படும் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பள்ளி நாட்காட்டியை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், நடப்பு கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் வேலை நாட்கள் 210ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 22 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக உள்ளன.

மேலும், ஜூன் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 17 முதல் 25ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும் எனவும் 26ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை காலாண்டு விடுமுறை எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதேபோல் டிசம்பர் 16 முதல் 23ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறும் எனவும் 24 முதல் 2027 ஜனவரி 3ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 15 முதல் 17 வரை வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் கொண்டாடப்படுவதால், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் 2027 ஏப்ரல் 23ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 24ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் இதர வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.