3 ஆண்டுகள் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணிபுரிந்தவர்கள், பொறுப்பிலிருந்து விலக விரும்பினால், மற்றோர் ஆசிரியரை நியமித்து EMIS தளத்தில் புதுப்பித்து பதிவு செய்திட பள்ளி கல்வித் துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 11 يونيو 2026

3 ஆண்டுகள் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணிபுரிந்தவர்கள், பொறுப்பிலிருந்து விலக விரும்பினால், மற்றோர் ஆசிரியரை நியமித்து EMIS தளத்தில் புதுப்பித்து பதிவு செய்திட பள்ளி கல்வித் துறை உத்தரவு



3 ஆண்டுகள் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணிபுரிந்தவர்கள், பொறுப்பிலிருந்து விலக விரும்பினால், மற்றோர் ஆசிரியரை நியமித்து EMIS தளத்தில் புதுப்பித்து பதிவு செய்திட பள்ளி கல்வித் துறை உத்தரவு The School Education Department has ordered that teachers who have served as Higher Education Guidance Teachers for three years and wish to step down from the role must appoint a replacement teacher and update the details on the EMIS portal.

3 ஆண்டுகள் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணிபுரிந்தவர்கள், பொறுப்பிலிருந்து விலக விரும்பினால், மற்றோர் ஆசிரியரை நியமித்து EMIS தளத்தில் புதுப்பித்து பதிவு செய்திட பள்ளி கல்வித் துறை உத்தரவு.👇👇👇

This document is a formal circular from the Tamil Nadu School Education Department regarding the Career Guidance Scheme for the 2026-2027 academic year.

Objective: It outlines the process for registering Career Guidance Teachers on the EMS portal for government high and higher secondary schools.

Key Action: District Educational Officers are directed to ensure that schools register these teachers on the portal between June 10, 2026, and June 30, 2026.

Teacher Eligibility: The scheme involves appointing or verifying Career Guidance Coordinators who have served in schools for at least three years Teacher Nomination Procee...

தமிழ் நாடு, மாதிரிப் பள்ளிகள்

அனுப்புநர்

திரு. இரா.சுதன்.இ.ஆ.ப (ஓ)

உறுப்பினர் செயலாளர்.

மாதிரிப் பள்ளிகள்.

போராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், சென்னை -600 006. பெறுநர்

முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

அனைத்து மாவட்டங்கள்.

5.5.: 1623/L1/CG-21/MS/2026, : 11.06.2026

அய்யா/அம்மையீர்.

பொருள்

: உயர்கல்வி வழிகாட்டி திட்டம் கல்வியாண்டு 2026 2027ஆம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 9,10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்தல்-சார்ந்து.

பார்வை தமிழ்நாடு மாதிரிப் பள்ளி உறுப்பினர் செயலரின் கடிதம்.

..: 960/L1/CG-16/MS/2025, : 10.06.2025

பார்வை 1 இல் காணும் செயல்முறைகளின் படி, உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு EMIS இணையதளத்தில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களின் பெயரினைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் தகவல்கள் முழுமையாக சென்றடைவதன் வாயிலாக மட்டுமே அனைத்து மாணவர்களும் உயர்கல்வி தொடர்வதை உறுதிசெய்திட இயலும். எனவே. இவ்விலக்கினை அடைவதற்கு ஏதுவாக பள்ளிகளில் ஏற்கனவே உள்ள உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்களாகவும் கூடுதலாக 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை உள்ள பிரிவு வாரியான வகுப்பு ஆசிரியர்களையும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக நியமிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்களில் எவரேனும் பணிபுரிந்த பள்ளியில் இருந்து பணி மாறுதல், பணி நிறைவு பெற்றிருப்பின் அல்லது மூன்று ஆண்டுகளாக உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணியாற்றி இந்த கல்வியாண்டில் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து விலக விரும்பும் ஆசிரியர்களுக்கு பதிலாக, பள்ளியில் பணியாற்றும் தகுதியும் விருப்பமும் உள்ள மற்றொரு ஆசிரியரை புதிய உயர் கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளராக 250 மாணவர்களுக்கு 1 உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் என்ற விகிதத்தில் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தெரிவு செய்து 10.06.2026 முதல் 30.06.2026 க்குள் நியமித்திடவும் அதனை EMIS தளத்தில் புதுப்பித்து பதிவு செய்திடவும் அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்வதன் வாயிலாக மட்டுமே. நடப்பு கல்வியாண்டில் நடக்கும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியின் போது வருகைப் பதிவு மற்றும் மதிப்பீட்டுத் தேர்வினை மேற்கொள்ள இயலும், எனவே. அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தக்க வழிகாட்டுதல்கள் வழங்கி அனைத்து உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்களின் விவரங்களை, EMIS இணையதளத்தில் பதிவு செய்வதனை உறுதி செய்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு:

EMIS இணையதளத்தில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக பதிவு செய்வதற்கான மாதிரி

நகல்:

CLICK HERE TO DOWNLOAD பள்ளி கல்வித் துறை உத்தரவு PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.