இனிய கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள் - பள்ளிக்கல்வி இயக்குநர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 3, 2026

இனிய கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள் - பள்ளிக்கல்வி இயக்குநர்



இனிய கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள் (2026-2027)

ஒரு மாதமாய் மௌனம் காத்த பள்ளிப்பூங்கா நாளை முதல் பேசப்போகிறது,

கரும் பலகைகள் முகம்கழுவி தயாராய் இருக்கும் வண்ணப்பொட்டு இட்டுக்கொள்ள,

வகுப்பறைகள் உங்களை சுவாசிக்க காத்திருக்கும் ,

விளையாட்டு மைதானமோ பசுமை போர்த்தி துள்ளி குதிக்கும்..

கல்வி அரும்புகளே

கட்டிக்கரும்புகளே

உங்கள் புன்னகைக்

கூடம் நாளை முதல் இந்த பள்ளிக்கூடம்,

ஒருபடி முன்னேற்றம் கண்ட உங்களுக்கு வெற்றிப்பூங்கொத்து..

அனைத்து உள்ளங்களையும் தாங்கிப் பிடித்து தைரியம் சொல்லும் நம் பள்ளி... யாவும் உண்டு இங்கு

கல்வியோடு ஒழுக்கம் அறிவு

எதிர்கால வாழ்வுக்கு அது ஒன்றே சரி

அனைவரிடமும் அன்பு காட்டு

உலகம் உய்ய அதுவே உயர்நெறி,,,

ஆசான்களே

புதுமைகளின் விளைநிலங்களே,,,

அறிவால் அகிலம் ஆள கற்பிக்கிற கற்பக தருக்களே,,,

சிலையைத் துடைத்து பொலிவாக்குவதல்ல நமது பணி

உடைந்த கல்லையும் கலையாக்குவதே கல்விப்பணி...

காலம் அறிவோம்

கடமை உணர்வோம்

உங்களின்

உயர் எண்ணச் சிறகுகளை மாணவர்கள் ஏந்தி வானில் பறப்பர்..

உங்கள் உள்ளங்களில் விளிம்பு நிலை மாணவர் தம் எதிர்காலத்திற்கான நல்வழிதனைக் காட்டுங்கள்..

இவ்வாண்டின் கல்விப்

பயணம் புதிது புதிது,,

பழமைகளை புறந்தள்ளி புதுமைகளை படைக்க காத்திருக்கும் உங்களுக்கு என் நெஞ்சம்நிறைந்த வாழ்த்துகள்..

இயந்திர உலகில் இதயங்களோடு பேசுகிற நீங்களே பாக்கியவான்கள்

புதிய உலகம் பிறக்கட்டும் உங்களில் இருந்து..

இனிய கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள்....

இங்ஙனம்

தங்கள் அன்புள்ள

முனைவர்.ச. கண்ணப்பன்

பள்ளிக்கல்வி இயக்குநர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.