ஜூன் மாத சிறார் திரைப்படம் "The Little Princess" திரையிடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Proceedings of the Director of School Education regarding the screening of the children's film "The Little Princess" in June!
பொருள்:
பார்வை:
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை
ந.க.எண்.034785 /எம் / இ1/ 2023, நாள். 15/06/2026
பள்ளிக்கல்வி - கல்விசாரா மன்றச் செயல்பாடுகள் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2026-27 ஜூன் மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், கடிதம் ந.க.எண். 034785 /எம்/இ1/2025, நாள் :06/02/2026
உலகமெங்கும் திரைத்துறை வாயிலாக திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும், மாற்றங்களும் ஏராளம். திரைப்படங்களால் மாணவர்களுக்கு அறம் மற்றும் சமத்துவ கருத்துகள் பற்றின புரிதலை, கலந்துரையாடல்களின் வாயிலாக எளிதான வகையில் ஏற்படுத்திவிட முடியும்.
அனைவராலும் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் முன்னெடுப்புகளில் பாராட்டப்பட்ட மிகவும் முக்கியமான நிகழ்வு சிறார் திரைப்படங்களை பள்ளிகளில் திரையிடுதல். மாணவர்களுக்கு சமூக நீதி, சமத்துவம், அறிவியல் பார்வை ஆகியவற்றைப் பற்றின விழிப்புணர்வு மற்றும் அதன் மீதான பார்வையை ஏற்படுத்துவதற்கும், மாணவர்கள் திரைப்படங்களை பகுத்தறிவுடன் அணுகுதல், தங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல்.
பாலின சமத்துவம் ஆகிய பண்பு நலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் போன்ற நோக்கத்துடன் மாதந்தோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திரைப்படம் திரையிடப்படுகிறது. மேலும் திரைப்படக் கலையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கலையை ரசிப்பதற்கும், கதை, எழுத்து, திரைக்கதை, நடிப்பு, உடையலங்காரம், பின்னணி வடிவமைப்பு, இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பு போன்ற திரைத்துறையின் பிரிவுகளை அறிமுகப்படுத்தவும் இந்நிகழ்வு அடிப்படையாக அமைகிறது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் அனைவரும் கண்டுணரும் வகையில் ஜூன் மாதம் "தி லிட்டில் பிரின்ஸஸ்" திரைப்படத்தை திரையிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
படத்தின் கதைக் கரு, சுருக்கம், குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டியவை, உரையாடவேண்டியவை இணைப்பில் பகிரப்பட்டுள்ளது.
குறிப்பு:
"தி லிட்டில் பிரின்ஸஸ்"
திரைப்படம் தலைமை ஆசிரியருக்கான EMIS
உள்ளீட்டு தளத்தில், Club option- இல் உள்ள Children Movie Screening பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
EMIS→ HM Login→ Home → Clubs Children Film Screening
திரையிடலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
1. திரையிடுவதற்கு முன்
இணைப்பு-1- இல் இணைக்கப்பட்டுள்ள படத்தின் புகைப்படத்தை திரைப்படம் திரையிடப்பட உள்ள இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளியின் அறிவிப்புப் பலகையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். திரையிடலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைத்தலுக்கு அப்பள்ளியைச் சார்ந்த SMC முன்னாள் மாணவ உறுப்பினர்களில் ஒருவரைத் தலைமை ஆசிரியருடன் இணைத்துக் கொள்ளலாம்.
* ஒருங்கிணைத்தலுக்கான SMC முன்னாள் மாணவ உறுப்பினர் பொறுப்பு ஆசிரியர் வழிகாட்டுதலின் படி திரையிடப்படவிருக்கும் படத்திற்கான முன்னேற்பாடுகளை செய்வர்.
பொறுப்பு ஆசிரியர் மற்றும் ஒருங்கிணைத்தலுக்கான பொறுப்பாளர்கள் திரையிடலுக்கு முன்பே படத்தைப் பார்த்து, படத்தின் கருப்பொருள், அதன் முக்கியத்துவம் போன்றவற்றை உணர்ந்து திரையிடலுக்கு தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
திரையிடப்படவிருக்கும் படம் மற்றும் இணைக்கப்பட்டுள்ள விழிப்புணர்ச்சி காணொளியை திரையிட்டு பார்த்து அதன் திரையிடும் தரத்தை உறுதிப்படுத்திட வேண்டும்.
திரையிடலுக்குத் தேவையான அறை தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். மற்றும் கருவிகளின் திரையிடப்படும் அறை, திரையிடலுக்கு ஏதுவான குறைவான, அமைதியான இடமாக இருக்க வேண்டும்.
ஒளி, ஒலி திரையிடப்படும் அறை காற்றோட்டமான, சுகாதாரமான, பாதுகாப்பான இடமாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
* படம் பார்க்கும் மாணவர்களுக்குப் போதுமான இருக்கை, குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
திரையிடலின் போது பொறுப்பு ஆசிரியர் மற்றும் SMC உறுப்பினர் திரையிடலுக்கு முன்பு படத்தின் கரு. அதன் பின்னணி, அதைத் திரையிடுவதற்கான காரணம் போன்றவற்றை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
* படத்தை திரையிடும் முன் திரைப்படத்தின் முன்னோட்ட காணொளியை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்
திரையிடப்படும் படம் தமிழ் அல்லாத பிறமொழியாக இருக்கும் வேளையில் அந்தப்படத்திற்கு நேரடி மற்றும் சுருக்கமான மொழிபெயர்ப்பைத் தலைமை ஆசிரியரோ, ஆசிரியரோ, பள்ளி மேலாண்மைக் குழுவிலுள்ள முன்னாள் மாணவரோ அல்லது பொது முன்னாள் மாணவரோ அல்லது எல்லோரும் இணைந்தோ செய்ய வேண்டும்.
திரையிடப்படும் படத்தில் பணி புரிந்தவர்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் பிற செய்திகளை எழுத்து வடிவில் வரும்போது அதை முழுமையாகப் பார்க்கும்படி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
குறிப்பாகப் படம் முழுமையாக முடியும் வரை விளக்குகளை அணைத்தே வைத்திருக்கவேண்டும்.
2. திரையிட்ட பின் · படத்தின் கதைக்கரு மற்றும் படத்திலிருந்து பெறப்பட்ட அனுபவத்தைப் பற்றிக் கலந்தாலோசித்து விவாதிக்க மாணவர்களுக்கு உரிய நேரம் கொடுக்கப்பட வேண்டும்.
* படம் சார்ந்து இணைப்பில் பகிரப்பட்ட கலந்துரையாடலுக்கான தலைப்புகள் அல்லது கேள்விகள், மாணவர்களிடம் பகிரப்பட்டு உரையாடலை ஊக்குவிக்க வேண்டும்.
திரையிடலை ஒருங்கிணைக்கும் ஆசிரியர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்று விளக்கங்களை, மாணவர்கள் கவனிக்கத் தவறிய கூறுகளை பகிரலாம்.
* கலந்துரையாடலுக்கு உரிய முக்கியத்துவமும், போதுமான நேரமும் வழங்கப்பட வேண்டும்.
இணைப்பு :
1. படத்தின் புகைப்படம்
2. படத்தின் கரு மற்றும் கதைச்சுருக்கம்
3. உரையாடலுக்கான கேள்விகள்
4. திரையிடலுக்கான நிரல்
பள்ளிக் கல்வி இயக்குநர்
பெறுநர்:
சகசா 15.06.25
முதன்மைக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலகம், அனைத்து மாவட்டங்கள்.
நகல் :
1. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை, தலைமைச் செயலகம், சென்னை -600 009
2. உறுப்பினர் செயலர், மாதிரிப் பள்ளிகள், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், சென்னை - 600 006
3. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் சென்னை - 600 006
4. இயக்குநர் தொடக்கக் கல்வி இயக்குநரகம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், சென்னை- 600 006
இணைப்பு1:
படத்தின் பெயர்: The Little Princess- தி லிட்டில் பிரின்ஸஸ்"
THE LITTLE PRINCESS
படம் வெளியான ஆண்டு: 1935
இயக்கம்: Mr. Walter Lang இணைப்பு 2:
படத்தின் கரு மற்றும் கதைச்சுருக்கம்
The Little Princess- தி லிட்டில் பிரின்ஸஸ்
இந்தக் கதை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை பின்னணியாகக் கொண்டது. சாரா கிரூவ் என்ற சிறுமி, தனது தந்தை கேப்டன் ரெஜினால்ட் கிரூவுடன் இந்தியாவில் வாழ்ந்து வருகிறாள். அவரது தந்தை பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியாக இந்தியாவில் பணியாற்றுகிறார். அன்பும் செல்வச் செழிப்பும் நிறைந்த சூழலில் வளர்ந்த சாரா, புத்திசாலித்தனம், கற்பனைத் திறன்.
கருணை போன்ற நற்குணங்களைக் கொண்டவள்.
சாராவின் தந்தை இரண்டாம் ஆங்கிலோ-போயர் போரில் பங்கேற்கத் தென்ஆப்பிரிக்கா செல்கிறார். சாரா, இங்கிலாந்தில் இருக்கும் மிஸ் மின்சின் நடத்தும் விடுதிப் பள்ளியில் சேர்க்கப்படுகிறாள்.
போரின் போது, சாராவின் தந்தை இறந்துவிட்டார், அவருக்குச் சொத்துகள் ஏதும் இல்லை என்றும் செய்தி வருகிறது. பள்ளியில் அனைவராலும் மதிக்கப்பட்டிருந்த சாராவைப் பணிப்பெண்ணாக ஆக்குகிறார்கள்.
அவமானங்கள், தனிமை ஆகியவற்றை எதிர்கொண்டாலும், சாரா தனது அன்பு, மனிதநேயம், நம்பிக்கை, மன உறுதி ஆகியவற்றை இழக்காமல் வாழ்கிறாள். தனது தந்தை உயிருடன் இருப்பதாக நம்பிக்கை கொள்கிறாள்.
சாராவின் நம்பிக்கை எவ்வாறு அனைவரின் மனதையும் மாற்றுகிறது என்பதே இப்படத்தின் கதை.
இந்தத் திரைப்படம் மாணவர்களிடம் அன்பு, மனிதநேயம், நம்பிக்கை, சமத்துவம் போன்ற மதிப்புகளை வளர்க்க உதவும் ஓர் உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக அமைகிறது.
இணைப்பு 3: அனைத்து குழந்தைகளும் கலந்துரையாடுவதற்கான செயல்பாடுகள்:
கலந்துரையாடல்
1. போருக்கான காரணங்கள். போரின் விளைவுகள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுங்கள். போரில்லாத உலகை எவ்வாறு உருவாக்கலாம்? உங்கள் கருத்துகளைப் பேசுங்கள். ஓவியம் வரைதல்
1. போரில்லா உலகு குறித்த ஒவியத்தை வரையுங்கள்.
அனுபவப் பகிர்வு.
குறிப்பு
உங்கள் வாழ்வின் நெருக்கடியான சூழல், அதிலிருந்து மீண்ட நிகழ்வு குறித்து உங்கள் அனுபவங்களை வகுப்பில் பகிருங்கள்.
திரைப்படம் பற்றிய மாணவர்களின் கலந்துரையாடல் குறிப்புகள் மற்றும் அனுபவ பகிர்வுகளை மாணவர் கலந்துரையாடல் புகைப்படங்களுடன் alumni@tnschools.gov.in மின்னஞ்சல் வாயிலாக மாநிலத்திற்கு பகிறலாம்.
தேன்சிட்டு இதழில் மாணவர் கலைவண்ணம்" பக்கத்தில் மாணவர்கள் தங்கள் ஓவியங்களை பதிவிட, thenchittu@tnschools.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் (அ) கீழ்கண்ட முகவரிக்கு நேரடியாகவும் ஜூன் 17 ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.(முகவரி : 8 வது தளம், ஈ.வெ.கி சம்பத் மாளிகை, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை 600 006)
👇👇👇
CLICK HERE TO DOWNLOAD DSE - The Little Princess Movie PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.